பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள விக்ரமன் குறித்து தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியிருக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய அரசியல் அடையாளத்தை எங்கும் விட்டுக் கொடுக்காமல் எந்த இடத்திலும் மறைக்காமல் செயல்படும் விக்ரமனை நினைத்து தான் பெருமைப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஐந்து சீசன்களை முடிந்து தற்போது ஆறாவது சீசனை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது விஜய் டிவி. இந்த சீசனையும் வழக்கம்போல் கமலஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். எப்பொழுதும் சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தற்போது முதல் முறையாக அரசியல்வாதி ஒருவரை களம் இறக்கி இருந்தனர்.

விக்ரமன் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் சில நாடகங்களிலும் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னர் திரைத்துறையை விட்டு விலகி அரசியல் துறைக்கு தன் கவனத்தை செலுத்தினார் .விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து அந்த கட்சியின் மாநில செய்தி தொடர்பாளராகவும் இருக்கிறார். தமிழகம் மட்டுமல்லாமல் வட இந்திய சேனல்கள் நடத்தும் விவாத மேடைகளில் கலந்து கொண்டு தமிழகம் சார்பாகவும், அவரது கட்சி சார்பாகவும் பேசி வருகிறார். இந்த நிலையில் விக்ரமனுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. அவர் அசீமிடம் எந்த இடத்திலும் நிதானத்தை இழக்காமலும் வார்த்தையை விடாமலும் எத்தனை பெரிய சண்டை வந்தாலும் பொறுமையை கையாளுகிறார் மேலும் அதேபோல் மற்ற போட்டியாளர்களையும் மரியாதையுடன் நடத்தி வருகிறார். இதனால் விக்ரமன் ஒவ்வொரு முறை நாமினேட் ஆகும் போதும் முதலில் சேவ் ஆகி விடுகிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கடிதம் எழுதச் சொல்லி பிக்பாஸ் ஒரு டாஸ்க்கை கொடுத்தார். போட்டியாளர்கள் அனைவரும் குடும்ப உறுப்பினர்களை நினைத்து உருகி கடிதம் எழுத, விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதினார். இதன் மூலமாக ஒட்டுமொத்த மக்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். கமலஹாசனே வார இறுதி நாட்களில் வந்து இந்த விஷயத்தைப் பற்றி பேசி நெகிழ்ந்து கண்ணீர் விட்டு கலங்கியிருந்தார். தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விக்ரமன் பற்றி சில கருத்துக்களை கூறியிருக்கிறார். பிக்பாஸில் ஒரு வாய்ப்பு வருகிறது நான் போகலாமா என்று விக்ரமன் என்னிடம் வந்து கேட்டார். நான் அவரை மகிழ்ச்சியோடு வழி அனுப்பி வைத்தேன். விக்ரமனை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தன்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் விக்ரமன் பேசும் வீடியோக்களை தோழர்கள் எனக்கு அனுப்புவார்கள். அப்போது அதை பார்த்து விக்ரமன் பற்றி தெரிந்து கொள்வதாகவும், தங்கள் தோழர்கள் விக்ரமனுக்கு வாக்களித்து வருவதாகவும் கூறினார்.

மேலும் விக்ரமன் எந்த ஒரு இடத்திலும் தான் ஒரு அரசியல்வாதி என்பதையும் தனது அரசியல் அடையாளத்தையும் எங்கேயும் மறைக்கவில்லை. தான் ஒரு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர், பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை கொண்டவர் என்பதை அவர் எல்லா இடத்திலும் தொடர்ந்து பேசிக்கொண்டே வருகிறார். இவ்வாறு அவர் பேசுவதே தமக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று திருமாவளவன் பேசினார். இவ்வாறு திருமாவளவன் நேரடியாக விக்ரமனுக்கு சப்போர்ட் செய்து பேசி இருப்பது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் திருமாவளவனே நேரடியாக சப்போர்ட் செய்ததால் விக்ரம் தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Thirumavalavan supporting openly for #Vikraman 🥺🥺
The real Political Game raa idhu 💯💯#Kamal – #Vikraman bonding getting exposed now 😲. #VCK party members now vote for Vikraman#Azeem plz get eliminate from this show, No use to play here#BiggBossTamil6 #biggbosstamil pic.twitter.com/6TSEQkRjOr
— Vidya Suganya (@Vidya_Suganya) December 27, 2022