Categories: சினிமா

40 வயதில் தந்தையான துணிவு பட வில்லன்.! மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த ஜான் கொக்கென்.!

வெளியிட்டது

சர்பேட்டா படத்தில் வில்லனாக வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த நடிகரின் மனைவிக்கு தற்போது வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களை அவர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். நடிகை மற்றும் தொகுப்பாளினியாக இருப்பவர் பூஜா ராமச்சந்திரன். இவர் ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

40 வயதில் தந்தையான துணிவு பட வில்லன்.! மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த ஜான் கொக்கென்.! 1

தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா 2, காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். இவருக்கும் அவருடன் பணியாற்றிய கேரிக் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக 2017 ஆம் ஆண்டு கேரிக்கை விவாகரத்து செய்தார் பூஜா. பின்னர் இவர் மலையாள நடிகர் ஜான் கொக்கேன் என்பவருடன் காதலில் விழுந்தார்.


இருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஜான் கொக்கேனுக்கும் ஏற்கனவே மீரா வாசுதேவன் என்பவருடன் திருமணம் ஆகி இருந்தது. சுமார் நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவர்கள் விவாகரத்து செய்துவிட்டனர். ஜான் கொக்கேன் பாகுபலி, கேஜிஎஃப், கேஜிஎஃப் 2, சர்பேட்டா, துணிவு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தல அஜித் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட துணிவு படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

இவர் பாகுபலியில் காலகேயர்களாக பின்னால் நிற்கும் ஒருவராக நடித்திருந்தார். பின்னர் கேஜிஎப் படத்தில் இவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கிடைத்தது. அதன் பின்னர் இவர் 2021 ஆம் ஆண்டு வெளியான சர்பேட்டை பரம்பரையில் வேம்புலியாக நடித்த அசத்தியிருந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இது மட்டுமில்லாமல் பல வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார்.


தற்போது இவருடைய மனைவி பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமான வயிற்றுடன் பூஜா தலைகீழாக யோகா செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. தற்போது ஜான் கொக்கேன் தனது மனைவிக்கு நடந்த வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார். சிகப்பு நிற உடையில் இருவரும் மேட்ச் அன்ட் மேட்ச் ஆக இருக்கிறார்கள்.

இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலங்களை சேர்ந்த யாரையும் அவர்கள் அழைக்கவில்லை. குடும்பத்தினர் முன்னிலையில் வைத்து மட்டும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. பூஜா ராமச்சந்திரனுக்கும் ஜான் கொக்கேனுக்கும் தற்போது பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்