மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் தமிழில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். இப்படத்தில் இவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு ரசிகர்களை கவர்ந்து இருந்தது. பின்னர் இவர் நடிப்பில் வெளியான மின்னல் முரளி படம் இவருக்கு தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்து இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. இவர் தற்போது இயக்குனர் ஜிதின் லால் இயக்கத்தில் ஏஆர்எம் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இவரின் ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் க்ரீத்தி ஷெட்டி நடித்து உள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள இப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இவர் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் ட்ரைலரை கொண்டாடி வருகின்றனர். மேலும் படம் வெற்றிபெற வேண்டும் என தங்களது வாழ்த்துக்களையும் அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : THINK MUSIC INDIA