பாபா படத்தை பார்க்க வந்த ஐஸ்வர்யா மற்றும் லதா ரஜினிகாந்த்.! தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இன்று தியேட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.

பாபா படத்தை பார்க்க வந்த ஐஸ்வர்யா மற்றும் லதா ரஜினிகாந்த்.! தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாட்டம் 1

விளம்பரம்

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் திரையுலகில் கோலொச்சி வரும் ரஜினிகாந்த்துக்கு இன்று 72 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலரும் கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளும் ரஜினியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாபா படத்தை பார்க்க வந்த ஐஸ்வர்யா மற்றும் லதா ரஜினிகாந்த்.! தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாட்டம் 3
ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ரஜினியே தயாரித்து நடித்த பாபா திரைப்படம் மீண்டும் திரையில் வெளியிடப்பட்டது. சில பல மாற்றங்களுடன் கிளைமாக்ஸ் காட்சிகள் மாற்றம் பாடல்கள் மாற்றம் என்று மெருகேற்றங்கள் செய்யப்பட்டு இந்த படம் வெளியாகி இருந்தது. ரஜினியின் புது படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பும் கிடைக்குமோ அந்த அளவிற்கு பாபா ரீ ரிலீஸ் படத்திற்கும் கிடைத்திருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  குலை நடுங்க வைக்கும் "கனெக்ட்" படத்தின் டீசர்.! நயனின் பிறந்தநாளில் வெளியிட்ட விக்னேஷ் சிவன்.!

பாபா படத்தை பார்க்க வந்த ஐஸ்வர்யா மற்றும் லதா ரஜினிகாந்த்.! தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாட்டம் 5

தமிழகத்தில் அதிகமான திரையரங்குகளில் பாபா திரைப்படம் ரீலீஸ் செய்யப்பட்டது. காலை 4 மணி முதல் காட்சிகள் ஒளிபரப்பான நிலையில் ரஜினி ரசிகர்கள் பலரும் படத்தை பார்க்க குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் இன்று திரையரங்குகளுக்கு வருகை தந்து பாபா படத்தின் முதல் காட்சியை பார்த்தனர்.

விளம்பரம்

பாபா படத்தை பார்க்க வந்த ஐஸ்வர்யா மற்றும் லதா ரஜினிகாந்த்.! தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாட்டம் 7
அப்போது அங்கு ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தியேட்டரில் மிகப் பிரம்மாண்டமான கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அது லதா ரஜினிகாந்த் கையால் வெட்டப்பட்டது. பின்னர் தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்களுக்கு அந்த கேக் வழங்கப்பட்டது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி பல அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறிய நடிகை நிவேதா தாமஸ்..! வெளியான லேட்டஸ்ட் புகைப்படத்தால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி..!

Youtube Video Code Embed Credits: TN360

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment