“நலமுடன் இருக்கும் டி.ஆர்”!!”அமெரிக்காவில் சிகிச்சைக்கு பிறகு வெளியான புகைப்படம்”!!

வெளியிட்டது

டி.ஆர் இந்த எழுத்துக்கு தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை. 1980களின் தமிழ் திரையுலகின் சகலகலா வல்லவன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, டைரெக்ஷன் என அனைத்துமே தன்னுடைய கைவண்ணத்தில் செய்து மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர். 1980ஆம் ஆண்டு வெளியான ” ஒரு தலை ராகம்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே பாடல்கள் எழுதியும், இசைத்தும், வசனங்கள் எழுதியும் இருந்தார் டி.ஆர்.ராஜேந்தர்.

"நலமுடன் இருக்கும் டி.ஆர்"!!"அமெரிக்காவில் சிகிச்சைக்கு பிறகு வெளியான புகைப்படம்"!! 1

அறிமுகமில்லாத நடிகர்கள், புது இயக்குனர் என பெரிய விளம்பரமில்லாமல் வெளியான இந்த படம் அந்த ஆண்டின் மிக பெரிய வெற்றி படமாக அது அமைந்தது. பின்னர் தொடர்ந்து ரயில் பயணங்களில், உயிருள்ள வரை உஷா, தங்கை ஓர் கீதம், என் தங்கை கல்யாணி, மைதிலி என்னை காதலி, எங்க வீடு வேலன், மோனிஷா என் மோனலிசா, காதல் அழிவதில்லை என பல வெற்றி படங்களை இயக்கினார். இவர் கடைசியாக இயக்கிய படம் 2007ஆம் ஆண்டு வெளியான “வீராசாமி”.

தான் பணிபுரியும் அனைத்து படங்களிலும் அவரே எழுதி, இயக்கி, நடித்து, இசையமைத்து, பாடல்கள் எழுதி, படங்கள் வெளியிட்டு வித்தகராக இருந்தவர். இவருடைய படங்களில் அறிமுகமான நாயகிகள் அமலா, நளினி, ஜீவிதா, மும்தாஜ் போன்றோர் பின்னர் மிக பெரிய நாயகிகளாக மாறினர். இவருடைய மகன் சிம்புவை இவர் 1995ஆம் ஆண்டே உறவு காத்த கிளி என்ற குழந்தையாக அறிமுகம் செய்தார். பின்னர் தாய் தங்கை பாசம், எங்க வீடு வேலன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்பு, பின் தந்தையின் இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார்.

 

சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் சினிமாவில் ஒதுங்கி இருந்த டி.ராஜேந்திர் சில நாட்கள் முன்பு உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீர் நெஞ்சு வலி காரணமாக இவர் அங்கு அனுமதிக்கப்பட்டதாக சிம்பு பின்னர் அறிக்கை வெளியிட்டார்.

அங்கிருந்து டிஸ்சார்ஜான டி.ஆர்.ராஜேந்தர் பின்னர் தமிழக முதலவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பேசினார். அந்த புகைப்படங்கள் வெளியாகி மிக பெரிய அளவில் வைரலானது. பின்னர் மேல் சிகிச்சைக்காக டி.ஆரை அமெரிக்கா கூட்டிச்செல்ல போவதாக செய்திகள் வெளியாகின. விசா பிரச்சனைகள் முடிந்த பின்னர் நடிகர் சிம்பு முன்னரே அமெரிக்கா சென்று தந்தையை மருத்துவமனையில் சேர்க்கும் பணிகளை மேற்கொண்டார்.

ஒரு வாரம் பின்னர் அங்கு சென்று டி.ராஜேந்தர் புரூக்ளின் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகவே சிகிச்சையில் இருந்தார். ரசிகர்கள் இப்பொது டி.ஆர் எப்படி இருக்கிறார்? என நடிகர் சிம்புவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தனர். இப்பொது தன்னுடைய தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாயார் உஷாவுடன் உள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

சிகிச்சை முடிந்துள்ளதால் சிறுது காலம் அங்கேயே தங்கி ஓய்வு எடுத்து விட்டு டி.ஆர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குழப்பத்தில் இருந்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படம் மூலம் குழப்பம் நீங்கி பெருமூச்சு விட்டுள்ளார்கள்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்