Categories: சினிமா

நானும், ஐஸ்வர்யா ராய் வர சீன் எல்லாம் வேற லெவல்ல இருக்கும், Cute ஆக பேசிய த்ரிஷா

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு ரஜினிகாந்த், கமலஹாசன் என பல முன்னணி நட்சத்திரங்கள் பலரும் வந்து கொண்டிருக்கின்றனர். ட்ரெய்லர் ஆறு மணிக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒன்பது மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சிறிது ஏமாற்றம் அடைந்தனர். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகை திரிஷா இளஞ்சிவப்பு நிற புடவையில் வந்து அசத்தினார். அந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் பலரும் இணையத்தில் பரவ விட்டு வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நானும், ஐஸ்வர்யா ராய் வர சீன் எல்லாம் வேற லெவல்ல இருக்கும், Cute ஆக பேசிய த்ரிஷா 1

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை நாச்சியாராக நடித்திருக்கிறார் திரிஷா. திரிஷாவை பொருத்தவரை இது போன்று வரலாற்று படங்களில் அவ்வளவாக நடித்ததில்லை. முதல் முறையாக ஒரு வரலாற்றுப் படத்தில் அதுவும் குந்தவை என்னும் மிகப்பெரிய ரோலில் நடித்து இருக்கிறார் திரிஷா. குந்தவை நாச்சியார் சோழ ராஜ்யத்தின் மிக முக்கியமான பெண்மணி ஆவார். ராஜராஜ சோழனின் சகோதரி ஆன இவர் அவருக்கு ராஜ்ஜியம் ஆள்வதில் பல தடவை உறுதுணையாக இருந்திருக்கிறார். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனை விட தனது தம்பி ராஜராஜ சோழனிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பவராக இருக்கும் கதாபாத்திரம்தான் குந்தவை நாச்சியார். பொன்னியின் செல்வன் படம் குறித்த எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும் நிலையில், இன்று ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்காக அவர் மிக கஷ்டப்பட்டு தமிழ் கற்றுக்கொண்டு செந்தமிழில் பேசியதாகவும், நிறைய தடவை ரிகர்சல் செய்து பார்த்து நடித்ததால் சுலபமாக நடிக்க முடிந்தது என்றும், இளவரசியாக நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது, தற்போது அதனை நிறைவேற்றிய மணி சாருக்கு நன்றி என்றும் கூறினார். மேலும் ஐஸ்வர்யாராயுடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது படத்தில் எனக்கும் அவருக்கும் இடையே நடக்கும் மோதல் ஹைலைட்டாக இருக்கும், நாங்கள் இருவரும் மிக என்ஜாய் பண்ணி நடித்தோம் என்றும் த்ரிஷா கூறினார் அந்த வீடியோவை நீங்களும் பார்க்க.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Shruthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்