குந்தவை என பெயரை மாற்றியதால் திரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்விட்டர் நிறுவனம்.! இதெல்லாம் டூ மச்.!

வெளியிட்டது

ட்விட்டரில் நடிகை திரிஷா குந்தவை என்று தனது பெயரை மாற்றியதால், திரிஷாவை பிரபலம் என அங்கீகரிக்க மறுத்து ப்ளூ டிக்கை பறித்திருக்கும் சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் திரைத்துறைக்கு வந்த போது எப்படி இருந்தாரோ இன்றும் அதே அழகை மெயின்டெயின் பண்ணிக் கொண்டு வருகிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. வயது ஏற ஏற அழகு கூடிக் கொண்டே போகும் ஒரு நடிகை என்று சொன்னால் அது திரிஷா தான். தற்போது கைவசம் பொன்னியின் செல்வன் பாகம் 2, லியோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தளபதிக்கு எப்படி லியோ 67வது படமோ அது போல் திரிஷாவுக்கும் லியோ 67வது படம் தான். எனவே திரிஷாவுக்கும் லியோ படம் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. லியோ படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கிற்காக காஷ்மீரில் சில நாட்கள் தங்கி இருந்த திரிஷா தற்போது சென்னை திரும்பி இருக்கிறார்.

குந்தவை என பெயரை மாற்றியதால் திரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்விட்டர் நிறுவனம்.! இதெல்லாம் டூ மச்.! 1

இதற்கிடையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் குந்தவை என்கிற கதாபாத்திரத்தில் ராஜராஜ சோழனுக்கு அக்காவாக நடித்திருக்கிறார் திரிஷா. படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே இருப்பதால் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். பான் இந்தியா படமாக வெளியாக இருப்பதால் இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களுக்கும் அவர்கள் செல்ல இருக்கின்றனர். பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத், கொச்சின், சென்னை, திருச்சி என்று இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு திரிஷா ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை குந்தவை என்று மாற்றி இருந்தார். அதேபோல கார்த்திக் வந்திய தேவன் எனவும், ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் எனவும், விக்ரம் ஆதித்த கரிகாலன் எனவும் தங்களது பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தின் பெயர்களை ட்விட்டரின் பெயர்களாக மாற்றி இருந்தனர்.


பெயரை மாற்றியதும் திரிஷா பிரபலம் இல்லை என்று நினைத்துக் கொண்டு அவரது ப்ளூ டிக் பறிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரிசா தனது ஹேண்டில் பெயரை மீண்டும் TrisTrasher சென்று மாற்றி இருந்தார். இருந்தபோதிலும் அவருக்கு மீண்டும் ப்ளூ டிக் கொடுக்கப்படவே இல்லை. இதை பார்த்த பலரும் குந்தவை என்றுபெயரை மாற்றியது ஒரு குத்தமா? அதற்காக போய் ப்ளூ டிக்கை பறித்து பிரபலம் இல்லை என்பது போல் காட்டி விட்டார்களே என்று வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர். அரசியல் மற்றும் திரை பிரபலங்களுக்கும் அதிகமான பின் தொடர்பவர்களை கொண்டவர்களுக்கும் மட்டுமே ப்ளூ டிக் வழங்கப்படும். இந்த ப்ளூ டிக் என்பது நம்பககரமான பக்கத்தை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கக்கூடிய ஒரு அம்சமாகும். இது தற்போது திரிஷாவிடம் இருந்து பறிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்