சமீப காலமாக யூடியூபை கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு youtuber தான் டிடிஎஃப் வாசன். இவர் ஆரம்பத்தில் தனது பைக்கில் அதிவேகமாக சென்று வீடியோக்களை வெளியிட்டு பல 2k கிட்ஸ் களின் மனதை கவர்ந்தார். மேலும் செல்லும் வழியில் பலருக்கு உதவி செய்வது மற்றும் யாராவது குழந்தைகள் பைக்கை திருகிப் பார்க்க வேண்டும் என்று கேட்டால் இந்தா தங்கம் திருகிப் பார் என்று கூறி பல வீடியோக்களை வெளியிட்டு, குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமானார். இவரை பின்தொடர்பவர்களை மிக அதிகம். நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார். சமீபத்தில் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு வந்த அவரை பார்க்க மிகப்பெரிய கூட்டம் குவிந்ததால் போர்க்களம் போல் காட்சியளித்தது சென்னையில் இருக்கும் ஒரு சாலை.

ஏதோ கலவரம் என நினைத்துக் கொண்டு வந்த போலீசார் பின்னர் டிடிஎஃப் வாசனை பார்க்க தான் இவ்வளவு கூட்டம் கூடியது என்று தெரிந்து கொண்டு அவரை பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் அவரது பிறந்தநாளுக்கு கோயம்புத்தூரில் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டி இருந்தார் வாசன். பைக்கில் 200 கிலோமீட்டர் வேகத்தில் அதி வேகமாக செல்வது பலருக்கும் தவறான முன்னுதாரத்தை கொடுக்கும். இளைஞர்கள் ஏதோ ஆர்வத்தினால் அவர் ஆதரிக்கிறார்கள். அவரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் மற்றொரு யூட்யூபரான ஜி பி முத்துவை பின்னால் அமர வைத்து கொண்டு 150 கிலோமீட்டர் வேகத்தில் கோயம்புத்தூரில் அவர் ஓட்டினார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த ஜிபி முத்து பயத்தில் அலறினார்.
நகரத்தில் பொதுமக்கள் அதிகமாக வண்டியில் செல்லும் இடங்களிலும், மக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களிலும் இவ்வளவு வேகத்தில் செல்வது ஆபத்து என டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. இதையடுத்து வீடியோ வெளியிட்ட வாசன் தான் விளையாட்டுக்காக தான் அப்படி செய்தேன், என் மேல் வழக்கு தொடுத்து என் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள் என்று பேசி இருந்தார். ஆனாலும் காவல்துறை விடுவதாக இல்லாமல் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. தற்போது அவர் நீதிமன்றத்தில் ஜாமினும் வாங்கி விட்டார். ஜாமீன் வாங்கிய பின்பு கையெழுத்து போடுவதற்காக அவர் இன்று வக்கீல்கள் இருக்கும் ஒரு இடத்திற்கு கோட்டு சூட்டுடன் காரில் வந்து இறங்கினர்.
மேலும் ஒரு வீடியோ வெளியிட்டு செய்தியாளர்கள் என்னிடம் மோத வேண்டாம் என்ற ரீதியில் செய்தியாளர்களுக்கு கடும் எச்சரிக்கும் கொடுத்திருந்தார். ஔன்று அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கேஜிஎப் படத்தில் வரும் வயலன்ஸ் வயலன்ஸ் ஐ ஹேட் வயலன்ஸ், ஐ அவாய்ட் என்கிற வசனத்தை பயன்படுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Twin Throttlers