Categories: சினிமா

“தெறிக்க விட்டுள்ள கமல்!!லோகேஷின் சிறப்பான ஃபேன் பாய் சம்பவம்!!ட்விட்டரில் பறக்கும் ரசிகர்களின் விக்ரம் பட ரிவியூ!!!

வெளியிட்டது

இப்போதைய தமிழ் சினிமாவின் ஹாட் நியூஸ் லோகேஷ் கனகராஜின் “விக்ரம்” படம் தான் .கிட்டத்தட்ட நான்கு வருட தவமாக காத்திருந்த கமல் ரசிகர்கள் தற்போது விக்ரம் திரைப்படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது.

"தெறிக்க விட்டுள்ள கமல்!!லோகேஷின் சிறப்பான ஃபேன் பாய் சம்பவம்!!ட்விட்டரில் பறக்கும் ரசிகர்களின் விக்ரம் பட ரிவியூ!!! 1

படத்தின் பாடல்கள், ட்ரைலர் என அனைத்துமே வெளியாகி அதனை பார்த்த ரசிகர்கள் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவை தெறிக்கவிட்ட வருகின்றனர்.  தற்போது இந்த படத்தை ஆவலுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். காலை 4 மணிக்கு முதல் காட்சியை காண தியேட்டர் முன்பு திரண்டு இருந்த ரசிகர்கள் தற்போது படத்தை பார்த்து மிகுந்த உற்சாகத்துடன் கமெண்ட்டுகளை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

முதல் கட்சியிலிருந்தே படம் அனல் பறக்க செல்வதாகவும், அதிலும் கமல் மற்றும் விஜய் சேதுபதியின் என்ட்ரி காட்சிகள் அசத்தலாகவும், வேற லெவலில் இருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். முழுக்க, முழுக்க ஆக்ஷன் படமாக வெளிவந்த இந்த படம் கமல் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் ஃபுல் ட்ரீட்டாக இருப்பதாக கூறியுள்ளனர்.

அனிருத்தின் பின்னணி இசை, விஜய் சேதுபதியின் வில்லத்தனம் என்று விக்ரம் ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்துள்ளதாக கூறும் ரசிகர்கள் படம் பிளாக்பஸ்டர் ஹிட் என்று பாராட்டியுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் புகழ்ந்த நிலையில் தற்போது ரசிகர்கள் சொல்ல முடியாத சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கி இருப்பதாக ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இதில் சிறப்பு காட்சியில் சூர்யா நடித்து இருப்பதால் அவரின் ரசிகர்களும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆக மொத்தம் விக்ரம் திரைப்படம் தற்போது பல பாசிட்டிவ் கமெண்டுகளை பெற்று மாஸ் காட்டி வருகிறது.

இந்த படத்தின் முடிவில் அடுத்த படத்திற்கான லீடை வைத்துள்ள லோகேஷ் இது வரை காணாத சூர்யாவை ரசிகர்களுக்கு காண்பித்து அதகளம் செய்துள்ளார். விரைவில் இந்த படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கும் படை இப்போதே ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்