பிரபல ட்விட்டர் பிரபலமும், சென்சார் போர்டு உறுப்பினராக இருக்கும் உமர் சந்து தற்போது இளைய தளபதி விஜய் குறித்து சர்ச்சையான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் இளைய தளபதி விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் மிகப்பெரிய சண்டை ஏற்பட்டு விட்டதாகவும் நடிகர் விஜய்க்கு கீர்த்தி சுரேஷுடன் தொடர்பு இருப்பதாகவும் அதற்காக அவர் மனைவி சங்கீதா கடைசி எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் தற்போது பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறார். இது தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் சங்கீதா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் ஆகும் நிலையில் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். மூத்த மகன் பெயர் ஜேசன் சஞ்சய். இரண்டாவது மகள் பெயர் சாஷா. தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இளையதளபதி விஜயின் தீவிர ரசிகையாக இருந்தவர் சங்கீதா. தளபதி விஜய் மீது ஒருதலையாக காதல் கொண்ட அவர் பின்னாளில் விஜயையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

விஜய்க்கும் சங்கீதாவிற்கும் 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது சுமார் 24 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாகவே விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதா விற்கும் மனக்கசப்பு இருப்பதாகவும், இருவரும் விவாகரத்து பெற இருப்பதாகவும் வதந்திகள் இணையத்தில் கொடி கட்டி பறந்து வருகின்றன. மேலும் விஜய் சங்கீதாவை பிரிந்து லண்டனுக்கு சென்று விட்டார் என்றும் பொய்யான தகவல்கள் சில விஷமிகளால் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றது. மேலும் விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் உடன் தொடர்பு இருக்கிறது என்றும் சிலர் தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எப்பொழுதும் விஜயின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் சங்கீதா, இதனால் தான் சமீப காலமாக ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் இணையத்தில் தகவல்கள் கொடிகட்டி பறந்து வருகிறது. அதே போல சில நாட்களுக்கு முன்னர் விக்கிபீடியாவில் 2002 ஆம் ஆண்டு முதல் சங்கீதாவை விஜய் பிரிந்து விட்டதாகவும் எடிட் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்சார் போர்டு உறுப்பினரும் திரைப்பட விமர்சகருமான உமர் சந்து திரை பிரபலங்கள் குறித்து பல சர்ச்சையான திமிட்டுகளை போட்டு வருகிறார். சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா குறித்து பதிவிட்டு இருந்த அவர், இருவரும் விவாகரத்து பெற கோர்ட்டில் விண்ணப்பித்து இருப்பதாக பதிவிட்டிருந்தார். மேலும் தனுசுக்கு இரண்டாவதாக ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர் சர்ச்சையாக பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் அதேபோல தற்போது விஜய்க்கு கீர்த்தி சுரேஷுடன் ரகசிய உறவு இருப்பதாகவும், விஜய் கீர்த்தி சுரேஷுக்கு உயர்தர கார்கள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கியதாகவும் விஜயின் மனைவி சங்கீதாவிற்கு இது குறித்து தெரிந்தும் எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது விஜயின் மனைவியும் விஜயும் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டுள்ளதாக புதிய பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். மேலும் சங்கீதா விஜயை இறுதியாக எச்சரித்ததாகவும் அவர் பதிவிட்டிருக்கிறார்.
இது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எந்த ஆதாரப்பூர்வ தகவலும் இல்லாமல் உமர் சந்து இவ்வாறு தொடர்ந்து பிரபலங்கள் குறித்து பதிவிட்டு வருவதாக நெட்டிசன்கள் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.