நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது.
வெளியான சில நிமிடங்களில் பல லட்சம் பார்வையாளர்களை பெற்று இந்த ட்ரைலர் சாதனை புரிந்து வருகிறது. தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சந்தானம். இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளுசபா’ என்கிற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானார். பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு குறுகிய காலத்திலேயே முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை வரவே, படங்களில் ஹீரோவாக அறிமுகமாக தொடங்கினார். 2008ம் ஆண்டு ‘அறை எண் 305ல் கடவுள்’ படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ மற்றும் ‘80ஸ் பில்டப்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது அவர் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ் பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய் உள்ளிட்ட பல நடித்திருக்கின்றனர். கார்த்தி யோகி இந்த படத்தை இயக்க ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார்.
‘பீப்பிள் மீடியா ஃபேக்டரி’ நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. வருகிற பிப்ரவரி இரண்டாம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Icon Music South