வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. வெளியான சில நிமிடங்கள் செய்ய இந்த படத்தின் ட்ரைலரை பல லட்சம் மக்கள் பார்த்து இருக்கின்றனர். மதுரையில் ஒரு கண்ணாடி கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் வடிவேலு. இவரை முதன் முதலில் சினிமா துறையில் அறிமுகப்படுத்தியது ராஜ்கிரண் தான். மதுரையில் ஒரு வேலைக்காக வந்த ராஜ்கிரணுடன் வடிவேலுவுக்கு பழக்கம் ஏற்பட, பின்னர் இவரை சென்னைக்கு அழைத்து வந்து திரைப்படங்களில் நடிக்க வைத்தவர் ராஜ்கிரண். ராஜ்கிரணின் “என் ராசாவின் மனசினிலே” என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார் வடிவேலு. ஆரம்பத்தில் கவுண்டமணி செந்தில் உடன் இணைந்து மூன்றாவதாக காமெடி செய்து கொண்டிருந்த இவர், பின்னாளில் தனி ஒரு காமெடியனாக உருவெடுத்தார். ட்ரெய்லர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வடிவேலுவின் உடல் மொழியும், எதார்த்தமான பேச்சும், தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்கும் அழகும் பலரையும் ஈர்த்து இருந்தது. இன்றைக்கு வடிவேலின் வசனங்களும், அவர் இல்லாமல் ஒரு மீம்ஸ் கூட நம்மால் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். சில வருடங்களாக அவர் படங்களில் நடிப்பதை பெரிதும் குறைந்திருந்தார் மேலும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றும் அவர் பிடிவாதமாக இருந்தார். பின்னர் இந்த திட்டம் ஒர்க் அவுட் ஆகாததால், மீண்டும் காமெடிக்கு திருப்பி இருக்கிறார் வடிவேலு. அந்த வகையில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இரண்டு பாடல்களும் மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருந்தது.
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருக்கிறார். வடிவேலுவுடன் சேர்ந்து சிவாங்கி, ஷிவானி நாராயணன், ரெட்டிங் கிங்ஸ்லி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு களத்தில் இறங்கி உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் ட்ரெய்லர் வீடியோவை நீங்களும் காண..! Watch the Below Video..!
YouTube Video Code Embed Credits: Sun TV