தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. இவர் மண் சார்ந்த திரைப்படங்களை எடுத்து, கிராமத்தின் அழகையும், அருமையும் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் சென்றவர் பாரதிராஜா. இவர் தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரை நேரில் சந்தித்து வைரமுத்து நலம் விசாரித்துள்ளார். பாரதிராஜாவை பொருத்தவரை எப்போதும் மண் சார்ந்த படங்கள் இப்படித்தான் எடுப்பார். இந்தப் படங்கள் அனைத்துமே காலத்தால் அழியாத படங்களாக இருக்கிறது. தற்போது 80 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இளையராஜா படம் இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் பாரதிராஜா. அந்த வகையில் பாண்டியநாடு, ராக்கி, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

கடந்த வாரம் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் திருச்சிற்றம்பலத்தில் மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் பாரதிராஜா. தனுசுடன் இணைந்து இவர் செய்யும் காமெடிகள் சிரிக்கும் வண்ணம் இருந்தது. இவர் தனுசுக்கு தாத்தாவாக அந்த படத்தில் நடித்திருந்தது ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திருந்தது. காமெடி, எமோஷனல் என்று இவர் நடிப்பில் அசத்தியிருந்தார். இதனிடையே திடீரென அவருக்கு நேற்று உடல் நலம் குறைவு ஏற்பட்டது. அஜீரணக் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது அவரது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் விருமன் மற்றும் திருச்சிற்றம்பலம் பாடல் வெளியீட்டு விழா வரை அவர் பங்கேற்று அவர் பேசியது இளைஞர்களுக்கு எனர்ஜி அளிக்கும் விதமாக இருந்தது. ஆனால் அதற்குள் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவரது நண்பர் வைரமுத்து அவரை மருத்துவமனையில் சென்று பார்த்திருக்கிறார்.
பின்னர் வைரமுத்து ட்விட்டரில் ஒரு ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார். மருத்துவமனையில் பாரதிராஜாவை பார்த்தேன்.
நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்ன சின்ன பின்னடைவுகளை சீர் செய்ய மருத்துவர்கள் சூழ்ந்து நிற்கிறார்கள். அல்லிநகரத்தை தில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார், கலை உலகை ஆண்டு வருவார் என்று அவர் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். கலை உலகை இவ்வளவு நாளாக ஆண்டு வந்த அந்த இயக்குனர் இமயம் மீண்டு நலம் பெற நாமும் வாழ்த்துவோம்.