இது Unfair Eviction.! பிக்பாஸ் நியாமான ஷோவே கிடையாது.! பிக்பாஸை வெளுத்து வாங்கிய வனிதா.!

வெளியிட்டது

தனது மகள் ஜோவிகா பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து தற்போது நடிகை வனிதா விஜயகுமார் காட்டமான பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் இந்த வெளியேற்றம் நியாயமான வெளியேற்றமே கிடையாது. யார் கன்டன்டே கொடுக்காமல் இருக்கிறார்களோ அவர்களை வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால் கண்டன் கொடுக்கிறேன் என்கிற பெயரில் ஓவராக செய்பவர்களை வெளியேற்ற வேண்டும். அதை விட்டுவிட்டு ஜோவிகா போன்ற நபர்களை வெளியேற்றியது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு Unfair எவிக்ஷன். இந்த வெளியேற்றம் நியாயமானது கிடையாது. இந்த ஷோவே நியாயமாக நடக்கவில்லை என்று காட்டமாக பேட்டி அளித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது Unfair Eviction.! பிக்பாஸ் நியாமான ஷோவே கிடையாது.! பிக்பாஸை வெளுத்து வாங்கிய வனிதா.! 1
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 62 நாட்களைக் கடந்து இன்று 63வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. மொத்தம் 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் இந்த வாரம் 8 பேர் நாமினேட் ஆன நிலையில் பலரும் சரவண விக்ரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மாற்றாக ஜோவிகாவை பிக்பாஸ் டீம் வெளியேற்றி இருக்கின்றனர். இந்த வெளியேற்றம் நியாயமானது இல்லை என்று சொல்லி ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜோவிகாவின் தாயார் வனிதா பிக் பாஸ் குறித்து விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

அந்த வகையில் அவர் தற்போது அளித்திருக்கும் பேட்டியில், “ஜோவிகா ஒரு கண்டன்ட் கொடுக்கும் போட்டியாளர், பாயிண்ட்டை எடுத்து வைப்பவர், அவர் மீது எந்த ஒரு ரெட் மார்க் கிடையாது, அவரைவிட உள்ளே பலர் சும்மா இருக்கிறார்கள். இல்லை ரொம்ப பண்றவங்களை தூக்கலாம். இது நியாயமான ஷோவே கிடையாது. என்னுடைய மகள் என்பதால் நான் இவ்வாறு கூறவில்லை” என்று சொல்லி கோபமடைந்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்