நடிகர் கார்த்திக் குறித்து கஞ்சா கருப்பு அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகியிருக்கிறது. ‘பருத்திவீரன்’ பட விவகாரம் சில நாட்களாக இணையத்தில் பூதாகரமாகி இருக்கும் நிலையில், தற்போது அது குறித்து அந்த படத்தில் நடித்தவர்களும், அமீருக்கு நெருங்கியவர்களும் தொடர்ந்து அமீருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ‘பருத்திவீரன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கஞ்சா கருப்பும் தற்போது பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர் கார்த்தி மற்றும் சூர்யா குடும்பத்தை மொத்தமாக கிழித்து தொங்க விட்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக இருப்பவர் கஞ்சா கருப்பு. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பட வாய்ப்புகள் இல்லாததால் பிக் பாஸில் கலந்து கொண்டார்.

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு முற்றிலும் குறைந்து போனது. தற்போது அவர் கிடைக்கும் வாய்ப்புகள் மட்டுமே நடித்து வருகிறார். இந்த நிலையில் ‘பருத்திவீரன்’ படம் குறித்தும் அமீர் குறித்தும் ஞானவேல் ராஜா அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் சர்ச்சையானது. அமீர் பொய் கணக்கு எழுதி பல லட்சம் ரூபாயை திருடிவிட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா குற்றம் சாட்டியிருந்த நிலையில், அமீருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கஞ்சா கருப்பு அளித்த பேட்டியில், “தற்போது கார்த்தி எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் ‘என்ன மாமா சௌக்கியமா?’ ‘சித்தப்பு’ என்கிற ‘பருத்திவீரன்’ படத்தின் டயலாக்கை தான் பேசுகிறார். இந்த டயலாக்கையும் அவருக்கு பாடி லாங்குவேஜையும் யார் கற்றுக் கொடுத்தது.?

‘பருத்திவீரன்’ படத்திற்கு பின்னர் எத்தனை படங்களில் கார்த்தி நடித்திருந்தாலும் அந்த படத்திற்கு ஈடாகாது. இவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போது சிவக்குமார் ஞானவேல் ராஜாவையும் அமீரையும் அழைத்து பேசியிருக்க வேண்டும். அமீருக்கு தர வேண்டிய பணத்தையும் தந்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் பிரச்சனை எப்போதோ முடிந்திருக்கும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. சூர்யாவையும் கார்த்தியையும் உருவாக்கியது. இயக்குனர் பாலாவும் அமீரும்தான். அதை அவர்கள் எப்போதும் மறந்துவிடக்கூடாது. ஞானவேல் ராஜா அமீரைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லாதவர். ரஜினிகாந்த் பாலச்சந்திரன் முன்பு கைகட்டி நிற்பார். கார்த்திக்கை அதுபோல அமீர் புகைப்படத்தை பூஜை ரூமில் வைத்து சாமி கும்பிட சொல்லவில்லை. ஆனால் ஒரு குருவுக்கு உண்டான மரியாதையை தர வேண்டும்.

‘பருத்திவீரன்’ படத்தின் போது நான் ஒரு டேக்கில் நடித்து முடித்து இருந்தேன் ஆனால் கார்த்திக் நடிக்க 15 டேக் தேவைப்படும். அதனால் தான் செலவு அதிகமானது. இதை கார்த்தி ஈடு செய்வாரா? இப்போது அவர் கோடிகளில் சம்பளம் வாங்க யார் காரணம்? என்பதை மறந்துவிட்டார்” என பேசி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: Wow Thamizha