Categories: சினிமா

ஹிட் அடித்த வாழை படத்தின் OTT ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியது..! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ். குறைந்த படங்களே தமிழ் சினிமாவில் இயக்கி இருந்தாலும் முன்னணி இயக்குனராக உருவெடுத்து உள்ளார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார். இவர் இயக்கிய மாமன்னன் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இவர் அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரம் வைத்து பைசன் படத்தினை இயக்கி வருகிறார்.

ஹிட் அடித்த வாழை படத்தின் OTT ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியது..! ரசிகர்கள் கொண்டாட்டம்..! 1

தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வாழை. இப்படத்தில் திவ்யா துரைசாமி, நிகிலா விமல் மற்றும் பிரியங்கா நடித்து உள்ளனர். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருந்தது. இந்நிலையில் இப்படம் அண்மையில் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் எப்போது ஓடிடியில் வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்தனர். இந்நிலையில் இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இப்படம் வருகிற அக்டொபர் மாதம் 11 ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்