பிரபல நாட்டுப்புற பின்னனி பாடகர் வேல்முருகன் தற்போது தனது மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தக்காளி கூடையை பரிசாக வழங்கி தக்காளி விலை உயர்வு குறித்து மறைமுகமாக கிண்டல் அடித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாட்டுப்புறக் கலையை வளர்த்தெடுக்கும் நபர்களில் முக்கியமானவராக இருப்பவர் பாடகர் வேல்முருகன். இவர் சுப்ரமணியபுரம் படத்தில் வரும் மதுர குலுங்க குலுங்க என்கிற பாடலின் மூலமாக பின்னணி பாடகராக அறிமுகமானார். முதல் பாடலிலே மிகப்பெரிய வெற்றி அடையவும் தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார். தொடர்ந்து ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா, ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால, சங்கிலி புங்கிலி, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் என்கிற பல பாடல்களை பாடி இருக்கிறார்.

பின்னர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாக உலகம் எங்கிலும் பேமஸ் ஆனார் வேல்முருகன் .ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. மக்களால் குறைந்த வாக்குகள் அளிக்கப்பட்டு பாதியிலேயே வெளியேறினார். தொடர்ந்து தனது மனைவியுடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் சீசன் 2 விலும் பங்கெடுத்தார். அது மட்டுமல்லாமல் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு நடனமாடி வந்தார் வேல்முருகன். இந்த நிலையில் வேல்முருகன் மனைவிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அவர் தனது மனைவிக்கு காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை வாங்கி பரிசளித்து கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
தற்போது இந்தியாவில் தக்காளியின் விளைச்சலின் குறைவால் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 140 வரை விற்பனையாகி வருகிறது. சில நாட்களாக கொஞ்சம் விலை குறைந்து 100 ரூபாய் வரைக்கும் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் ஒரு கூடை நிறைய தக்காளி வாங்கி அதை கிப்ட் போல் பேக் செய்து அதை தனது மனைவிக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். வேல்முருகன் மனைவியின் பிறந்தநாளை கொண்டாடும் சாக்கில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்வதை கட்டுப்படுத்த முடியாத அரசை மறைமுகமாக விமர்சிக்கும் வண்ணம் இந்த பரிசை அவர் வழங்கி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதை பார்த்த நெட்டிசன்கள் காஸ்ட்லி கிஃப்ட்டா கொடுத்து இருக்கீங்களா என்றும் அவரை கலாய்த்து வருகின்றனர்..!