கடந்த 2 நாட்களாக பெரும் மீம்சுகளால் தாக்கப்பட்டு வருபவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் பிரபல செஃப் பட். மிகவும் வெற்றிகரமான இந்த நிகழ்ச்சி மக்களுக்கும் மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியாக வருகிறது. இப்போதைய விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியும் இதுவே.
நிறைய காமெடி, கொஞ்சம் சமையல் போட்டி பொழுபோக்கைகை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உருவான இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு சீசன்களை முடித்து இப்பொது 3வது சீசனில் உள்ளது. தொகுப்பாளர் ரக்ஷன், நடுவர் தாமு, வெங்கடேஷ் பட், கோமாளிகள் புகழ், பாலா, மணிமேகலை, சிவாங்கி, அஸ்வின், ஷகிலா, வனிதா என கலந்துக்கொண்ட பலரும் ரசிகர்களுக்கு ஃபவரேட்.
விமர்சன ரீதியாயகவும், வரவேற்பு ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை இந்த நிகழ்ச்சி பெற்றுள்ளது. இதனால் வெளியிலும் இந்த நிகழ்ச்சிக்கு ப்ரோமோஷன்கள் நடந்தன. மக்கள் பாலரும் ஒவ்வொரு வாரம் நிகழ்ச்சிக்காக காத்திருப்பது என ரசிகர்களையும் இந்த நிகழ்ச்சி முழுவதுமாக கட்டிபோட்டுள்ளது.

கொஞ்சம் ஓவராக சென்ற செஃப் வெங்கடேஷ் அண்மையில் “இந்த நிகழ்ச்சியை பார்த்து ஒரு பெண், கருத்தரித்துள்ளார்” என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கொஞ்ச நாளில் இது ரசிகர்களுக்கு பெரிய மீம் பொருளாக மாறியது. நிறைய பேர் நேரடியாக வெங்கடேஷை தாக்கி பேசினார். ப்ரோக்ராம் பார்த்தால் கர்ப்பம் ஆகிடுவாங்களா? என பலரும் அவரை கேலி செய்து வருகின்றனர்.
விஜய் டிவி பிரபலங்கள் இந்த பூடககர பிரச்சனைக்கு வெங்கடேஷ் பட்டிற்கு ஆதரவு கூறிவரும் நிலையில் இப்பொது வெங்கடேஷ் பட் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் 2 நாட்களாக எனக்கு 20000 மேல் மெசேஜ்களும் போஸ்டுகளும் வந்து கொண்டு இருக்கிறது.
இவர் மீண்டும் அந்த நிகழ்ச்சிக்கு தான் வரப்போவதாகவும் இந்த மீம்சுகளை கண்டு பயந்து ஒதுங்கி ஒளிய போவது இல்லை என்றும் பதிவினை இட்டுள்ளார். இதற்கு பல ரசிகர்கள் தங்களுடைய ஆதரவுகளை தெரிவித்து உள்ளனர்.