நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். ஜெயிலர் படத்தின் மாபெரும் ஹிட்டுக்கு பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு படத்திற்கு உள்ளது. ரசிகர்கள் இப்படத்தினை காண ஆவலுடன் காத்து உள்ளனர். ஜெயிலர் படத்தை போலவே இந்த படத்திலும் அமிதாப்பச்சன் , ராணா , ரித்திகா சிங் , மஞ்சு வாரியார் என பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லைக்கா நிறுவன தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படம் உருவாகி இருக்கிறது.ஜெய் பீம் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் ஞானவேல் இப்படத்தினை இயக்கி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. வெளியாகி 5 நாட்களில் இப்படம் ரூ.240 கோடி வசூலை பெற்றுள்ளது.
தற்போது இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறது படக்குழு. தற்போது அமிதாப்பச்சன் மற்றும் ரஜினிகாந்த் அடங்கிய நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : SUN TV