7 ஆண்டுகளுக்கு முன் நானும் ரவுடி தான் படத்தில் துவங்கிய காதல் கதை இன்று திருமணத்தில் முடிந்துள்ளது கோலிவுட்டின் காதல் ஜோடிகளான இயக்குனர் விக்னேஷிற்கும் நடிகை நயன்தாராவிற்கும். பெரும்பாலும் எப்போது கல்யாணம் என பலரும் இருவரையும் நச்சரித்து வந்த நிலையில், இன்று அந்த நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஆனால் நடிகை நயன்தாரா திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஓடிடி நிறுவனத்திற்கு ஒளிப்பரப்பாக ஒப்பந்தனாகியுள்ளதால் எதுமே வெளியாகாது என்று கூறிய நிலையில் இப்பொது இயக்குநர் விக்னேஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் “அவள் 9 நான் 1 இருவரும் இணைந்து 10 ஆனோம்” என காலை 10 மணிக்கு திருமணம் நடைபெற்றதை குறிப்பிட்டு முதல் முறையாக பிரத்யேக திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
திருமண கோலத்தில் நடிகை நயன்தாரா மகாராணி போல அப்படி ஒரு பெரு அழகாக இருக்கிறார், நடிகை நயன்தாரா என்ன மாதிரியான பட்டுப் புடவையை திருமணத்துக்கு பயன்படுத்த உள்ளார் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில், சிகப்பு ரோஜாக்களை அடுக்கி வைத்தது போன்ற டிசைன் கொண்ட உடையில் மணமகளாக மேடையை அலங்காரித்துள்ளார்.
நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டிய ஒரு புகைப்படம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்,மேலும், கணவனாக மாறியுள்ள காதலர் விக்னேஷ் சிவன் அன்பாக கொடுத்த நெற்றி முத்தமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
முக்கிய நடிகர் நடிகைகள்,சி திரை உலக பிரபலங்கள் மட்டுமே பங்கெடுத்த இந்த விழாவில் வைக்கப்பட்ட நிறைய கெடுபிடிகளால் அந்த பக்கமாக பீச்சிற்கு வாக்கிங் சென்றவர்களுக்கு கூட மிகவும் கஷ்டமாகி போனது. போலீஸ் மற்றும் அங்கிருந்த பௌன்சர்கள் என மாறி மாறி கொடுத்த பிரெச்சனையால் அங்கு சில நேரம் சலசலப்பு நிகழ்ந்தது.
Video Courtesy – BehindWoodsTV