இன்று தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். இவர் மலையாள சினிமாவில் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். மேலும், தென்னிந்திய சினிமா உலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகின்றார்.

இவர் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. மேலும், இவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா,சிம்பு, விக்ரம்,விஜய் சேதுபதி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்துவாக்கில ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கடந்த 7 ஆண்டுகள் மேல் காதலித்து வரும் இருவரும், இன்று பாரம்பரிய முறைப்படி மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். மீடியாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஓடிடி தலத்தில் திருமண பதிவை ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதாலும் இன்னும் அவர்களுடைய திருமணத்தில் இருந்து எந்த ஒரு புகைப்படமும் வெளிவரவில்லை.
அந்த வகையில் எப்பொழுது திருமணம் என்று கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் என்று சொல்லிக் கொண்டிருந்த நடிகை நயன்தாரா அவருக்கு இன்று இரு வீட்டார் சம்மதத்துடன் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற இருக்கின்றது.மேலும், இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பெரிய செட் அமைத்து மிக பிரம்மாண்டமான அளவில் நடைபெற இருக்கின்றது.
விக்னேஷ் சிவனின் பெரியம்மா இந்த திருமணத்திற்கு தன்னை அழைக்கவே இல்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், விக்னேஷ் சிவனின் அப்பாவின் சகோதரன் மனைவியை.
இவர் சிறு வயதில் பள்ளி விடுமுறை என்று இங்கே தான் வருவார்.அவர் திருமணத்திற்கு எங்களை அழைப்பார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அதுமட்டுமல்லாமல் குலதெய்வம் கோவிலுக்கு அழைத்துச் சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நான் தான் கூறினேன்.
அப்போதும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் தான் சென்றார்கள். அதுவும் எனக்கு வருத்தம் தான் அதனைத் தொடர்ந்து தற்போது திருமணத்திற்கு குப்பிடவில்லை என்று கண் கலங்கியபடி அவர் பேட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது.