முனீஸ் ராஜாவை பிரிந்ததற்கான உண்மையான காரணம் இதுதான்..! ஜீனத் பிரியா அதிர்ச்சி தகவல்.!

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தை ஆக்கிரமித்திருக்கும் ஒரு செய்தி என்று சொன்னால் அது நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான ஜீனத் பிரியா அவரது கணவர் முனீஸ் ராஜாவை பிரிந்தது தான். இந்த நிலையில் தற்போது ஜீனத் பிரியா முனீஸ் ராஜாவை பிரிந்ததற்கான காரணம் குறித்து பேட்டி ஒன்றில் விளக்கி இருக்கிறார். அதில் தினமும் இரவு குடித்துவிட்டு வந்து தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், தன்னிடம் இருந்து அவர் ரூ.10 கோடி வரை பணம் எதிர்பார்த்ததாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முனீஸ் ராஜாவை பிரிந்ததற்கான உண்மையான காரணம் இதுதான்..! ஜீனத் பிரியா அதிர்ச்சி தகவல்.! 1

விளம்பரம்

ராஜ்கிரணின் மனைவியின் மூத்த கணவருக்கு பிறந்தவர் பிரியா. இவர் ராஜ்கிரணின் வளர்ப்பில் ஜீனத் பிரியா என்கிற அடையாளத்துடன் வளர்க்கப்பட்டு வந்தார். கடந்த 2022ம் ஆண்டு ‘நாதஸ்வரம்’ சீரியல் முனீஸ் ராஜாவை முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பணத்திற்காக இந்த திருமணம் நடைபெற்றது என்றும், தன் பெயரை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்ட ஜீனத் பிரியா தனது கணவரை பிரிந்து விட்டதாகவும், தனது தந்தையை மிக காயப்படுத்தி விட்டேன். அதற்கு மன்னிப்பு கேட்டும் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

தொடர்புடையவை  "ஊருக்குள்ள வந்தா? கொன்னுடுவீங்களா?" சம்பவம் செய்ய காத்திருக்கும் மாமன்னன்.! இதோ ட்ரைலர்..!

முனீஸ் ராஜாவை பிரிந்ததற்கான உண்மையான காரணம் இதுதான்..! ஜீனத் பிரியா அதிர்ச்சி தகவல்.! 3
இந்த நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கும் ஜீனத் பிரியா முனீஸ் ராஜா குறித்து பல அதிர்ச்சி தகவல்களை கூறியிருக்கிறார். தினமும் இரவு குடித்துவிட்டு வந்து தன்னை கடுமையாக தாக்கியதாகவும்,ரூ.10 கோடி ரூபாய் வரை பணம் கேட்டு மிரட்டியதாகவும், தனது தாயார் பெயரையும் தன்னை வளர்த்த தந்தை ராஜ்கிரண் பெயரையும் அசிங்கப்படுத்துவதற்காக மிகக் கேவலமாக பேசி வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். சில ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Facebook Video Embed Code Credits: Indiaglitz Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment