டிஎஸ்பி படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் தான் டிஎஸ்பி. இந்த படத்தில் இருந்து சமீபத்தில் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் போலீசாக விஜய்சேதுபதி நடித்து உள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. திரைத்துறையில் துணை வேடங்களில் நடித்து இன்று மிகப் பெரிய இடத்தை அடைந்து இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தனது கடுமையான உழைப்பால் இந்த இடத்தை அவர் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்திலேயே முண்ணனி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் ஆகியோருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக விக்ரம் படத்தில் சந்தானமாக நடித்து மிரட்டி இருப்பார் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமே நடிக்காமல், வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் அறிமுகமான போதிலும், இவருக்கு பேரும் புகழும் கிடைத்த படம் என்றால் அது பீட்சா தான். பின்னர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களும் மிக பெரிய வெற்றி பெற்றது.
தற்போது டிஎஸ்பி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அனு, ஷிவானி, விஜய் டிவி புகழ் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது. நீங்களும் அந்த ட்ரைலரை காண.! Watch the below video.!
Youtube Video Code Embed Credits: Sun Tv