Categories: சினிமா

பாலிவுட்டில் களம் இறங்கிய விஜய் சேதுபதி.! வில்லனாக மாறி மிரட்டி எடுத்துள்ள மக்கள் செல்வன்.!

வெளியிட்டது

விஜய் சேதுபதி போலீசாக களம் இறங்கி இருக்கும் ஹிந்தி தொடரான “பார்சி” ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. நீண்ட ஆண்டுகள் துணை நடிகராக இருந்து, பின் மெல்ல குறும்படங்களில் நாயகனாக நடித்து இப்போதுள்ள முன்னணி நடிகர்கள் தனுஷ், கார்த்தியுடன் பின்னணியில் நடித்து, நாயகனாக உருமாறி இப்பொது இந்திய அளவில் முக்கிய நடிகராக அறியப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தனுஷின் “புதுப்பேட்டை”, கார்த்தியின் “நான் மகான் அல்ல” போன்ற படங்களில் சின்ன பாத்திரங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இயக்குனர் சீனுராமசாமி இவரை “தென்மேற்கு பருவக்காற்று” படம் மூலம் நாயகனாக்க, கார்த்திக் சுப்பராஜ் இவரை “பீட்சா” படம் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.தொடர்ந்து “சூத்து கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, விக்ரம் வேதா, நானும் ரௌடி தான் சேதுபதி, தர்மதுரை” என நாயகனாக கலக்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

பாலிவுட்டில் களம் இறங்கிய விஜய் சேதுபதி.! வில்லனாக மாறி மிரட்டி எடுத்துள்ள மக்கள் செல்வன்.! 1

பின்னர் ரஜினியுடன் “பேட்ட” விஜயுடன் “மாஸ்டர்” இப்போது கமலுடன் “விக்ரம்” போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டியுள்ளார். தொடர்ந்து நாயகனாகவும், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை வில்லனாகவும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என இந்தியளவில் கவனம் இருக்கும் நடிகராக இருக்கிறார் விஜய் சேதுபதி. தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் வெற்றிக்கு பின்னர் ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய வெப் சீரிஸ் தான் பார்சி. இதில் முன்னணி நடிகர் ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ராஷி கண்ணா, கேகே மேனன், நடிகை ரெஜினா போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

தற்போது இந்த சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. 8 எபிசோடுகளுடன் இந்த தொடர் ஆக்ஷன், திரில்லிங், நகைச்சுவை என அனைத்து அம்சங்களுடன் உருவாகி இருக்கிறது. சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் அவர்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கும் இடையேயையான ஒரு விறுவிறுப்பான போராட்டம்தான் பார்சி தொடர். இது பிப்ரவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. தற்போது இந்தத் தொடரின் தமிழ் டிரைலர் வெளியாகியிருக்கிறது. இதில் சிறந்த வில்லத்தனங்களை செய்யும் வில்லனாக நடிப்பில் அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி. அந்த ட்ரெய்லரை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.. Watch the below video.!

Youtube Video Code Embed Credits: Prime Video India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்