Categories: சினிமா

குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய விஜய் டிவி புகழ்..!

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் தான் புகழ். சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் சிறு கதாபாத்திரத்தில் வந்து தனது கடின உழைப்பால் இன்று முன்னேறி உள்ளார். இவர் சினிமா வாழ்க்கையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்து உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தனது காமெடி திறமையால் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய விஜய் டிவி புகழ்..! 1

தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக உயர்ந்து இருக்கிறார். இவர் நாயகனாக நடித்த ஜூ கீப்பர் படம் விரைவில் வெளியாக உள்ளது. இவர் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த பென்சியை கரம் பிடித்து உள்ளார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. அண்மையில் குழந்தையின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். இந்நிலையில் புகழ் மகள் ரிதான்யா உடன் தீபாவளியை பிரம்மாண்டமாக கொண்டாடி உள்ளார்.

இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அனைவர்க்கும் தனது தீபாவளி வாழ்த்துக்களை கூறி உள்ளார். புகழின் குடும்பத்திற்கும் அவரது ரசிகர்கள் தீபாவளிவாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்