Categories: சினிமா

“ஏன் மடமை என்று ஊர் மனதை வென்றான்”!! விஜய் ஆண்டணி ரத்தம் first look”!!

வெளியிட்டது

"ஏன் மடமை என்று ஊர் மனதை வென்றான்"!! விஜய் ஆண்டணி ரத்தம் first look"!! 1

இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுக இப்பொது நடிகராக வெற்றிகரமாக வளம் வருபவர் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. “நான்” படம் மூலம் நடிகரான இவருக்கு “பிச்சைக்காரன்” படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. தமிழ் மட்டுமின்றி மொழி மாற்றம் செய்யபட்ட இந்த படம் தெலுங்கிலும் நல்ல வெற்றியை பதிவு செய்தது. கடைசியாக கோடியில் ஒருவன் படத்தில் நடித்து இருந்த இவர் இப்பொது “கொலை, அக்னிச்சிறகுகள், வள்ளி மயில், ரத்தம்” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் தற்போது இயக்குனர் சி.எஸ்.அமுதனின் இயக்கத்தில் உருவாகியுள்ள “ரத்தம்” படத்தின் first look போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏன் மடமை என்று ஊர் மனதை வென்று போர் புரியவே வந்தான் ஒருவன்” என்ற tagline வைத்து இந்த படத்தின் போஸ்ட்ர் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் க்ரைம் த்ரில்லர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இயக்குனர் அமுதனின் படங்களில் இருந்து வேறு கோணத்தில் இது உருவாகியுள்ளது. “ஸ்பூஃப் படங்களை எனது பிராண்ட் சினிமாவாக நான் கருதவில்லை. உண்மையில், ரத்தம் போன்ற படங்கள் தான் நான் எடுக்க விரும்பினேன், ஆனால் தமிழ் படம் தான் நடந்தது,” என்று இந்த படம் குறித்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் கூறுகினார். “ரத்தம் , விக்ரம் வேதா அல்லது  விக்ரம் படங்களை போலக்ரைம் த்ரில்லராக இருக்கும்” எனவும் கூறியுள்ளார்.

ரத்தம் படத்தில் விஜய் ஆண்டனியைத் தவிர, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், ஜெகன், நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்க, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே கோபி அமர்நாத் மற்றும் சுரேஷ் கையாளுகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்