“ஷூட்டிங் துவங்கவுள்ள பிக் பாஸ் 6″!!இவங்கெல்லாம் வராங்களா இந்த வாட்டி”!!

"ஷூட்டிங் துவங்கவுள்ள பிக் பாஸ் 6"!!இவங்கெல்லாம் வராங்களா இந்த வாட்டி"!! 1

விஜய் டிவியின் தற்போதைய இரு முக்கிய நிகழ்ச்சிகள் என்றால் அது, பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளே. மூன்றாவது சீசனை நேற்று வெற்றிகரமாக முடித்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிகா முதல் இடத்தை பிடித்துள்ளார். மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ள இந்த நிகழ்ச்சியால், அடுத்து மக்களின் கவனம் திரும்பியுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மேல்.

விளம்பரம்

"ஷூட்டிங் துவங்கவுள்ள பிக் பாஸ் 6"!!இவங்கெல்லாம் வராங்களா இந்த வாட்டி"!! 3

தொழில்நுட்பங்களும், விஞ்ஞானமும் அதிகரித்து வரும் வேளையில் இப்பொது மக்களுக்கு நிறைய விஷயங்களும் செய்திகளும் நொடிக்கி நொடி கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எதோ ஒன்றை எப்போதும் தேடும் மனிதமனம், இந்த காலத்திலும், அடுத்த வீட்டில் நடக்கும் விஷயங்களை குறித்து பேசுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக நேரிலேயே ஒருவர் வீட்டினுள் நடக்கும் விஷயங்களை பார்க்க மனித மனம் எப்போதும் ஆசைப்படும்.

விளம்பரம்

"ஷூட்டிங் துவங்கவுள்ள பிக் பாஸ் 6"!!இவங்கெல்லாம் வராங்களா இந்த வாட்டி"!! 5

இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக இருந்த “பிக் பாஸ்” நிகழ்ச்சி ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. தமிழ் சமூகத்தில் இது கொஞ்சம் எதிர்மறையான விமர்சங்களை பெரும் என்பதால் இதனை துவங்க தமிழில் கொஞ்சம் தயங்கினர். சில ஆண்டுகள் மிக பெரிய யோசனைக்கு பின், தமிழில் துவங்கினர். தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர் கமல் இதனை தொகுத்து வழங்க ஒப்பந்தமானார். இதுவே மிக பெரிய எதிர்பார்ப்பை இந்த நிகழ்ச்சியின் மேல் ரசிகர்களுக்கு உருவானது. எப்போதும் சினிமாவில் முற்போக்கான சிந்தனைகளை கொண்டு வந்தவர் நடிகர் கமல். அதேபோல் சின்னத்திரையிலும் ஒரு மிக முக்கிய முன்னேற்றத்திற்கு விஜய் டிவி நிறுவனம் முயன்றது.

விளம்பரம்
தொடர்புடையவை  வெறுப்பை கொட்டிய நிரூப்.. கதறி அழுத அபி.. அரவணைத்த ஜூலி | BiggBoss Ultimate Promo

"ஷூட்டிங் துவங்கவுள்ள பிக் பாஸ் 6"!!இவங்கெல்லாம் வராங்களா இந்த வாட்டி"!! 7

முதல் சீசனே மிக பெரிய வெற்றியையும், சர்ச்சைகளையும் இது ஏற்படுத்தியது. 100 நாட்கள் ஒரே வீட்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்கேற்பவர்களை கொண்டு தினம் ஒரு விளையாட்டு நிகழ்வு, போட்டிகள், வாராவாரம் ஒரு வெளியேற்றம் என அனைத்து பிரச்சனைகளிலும் சந்தித்து மக்களின் ஆதரவில் மக்களே நேரடியாக வாக்களித்து தொடருபவர்களே போட்டியின் வெற்றியாளராக தேர்ந்துடுக்கப்படுவார்கள்.

விளம்பரம்

"ஷூட்டிங் துவங்கவுள்ள பிக் பாஸ் 6"!!இவங்கெல்லாம் வராங்களா இந்த வாட்டி"!! 9

இதன் அடிப்படையில் முதல் சீசனில் ஆரவும், இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகா, மூன்றாவது சீசனில் பாடகர் முகின் ராவ், நான்காவது சீசனில் நடிகர் ஆரி என மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளர்களே வெற்றியாளர்களாக இருந்திருக்கிறார்கள். இதில் இன்னும் குறிப்பாக வெற்றியாளர்களை விட சில போட்டியாளர்களும் மற்ற போட்டியாளராகளுடன் அவர்களுக்கு ஏற்பட்ட சண்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை.

விளம்பரம்

"ஷூட்டிங் துவங்கவுள்ள பிக் பாஸ் 6"!!இவங்கெல்லாம் வராங்களா இந்த வாட்டி"!! 11

4 வெற்றிகரமான சீசன் முடிந்து 5வது சீசன் நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த சீசனை நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். கொரோனா காலகட்டத்தில் இந்த நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது. சில மறைக்கப்பட்ட தொகுப்புகளும் வெளியாகி மிகவும் வரவேற்பை பெற்றன. இதில் நடிகர் ராஜு வெற்றிபெற்று பரிசு தொகையாக 5000000 ரூபாயை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கொஞ்சம் சாப்பிடு தங்கம்.! வருங்கால மனைவிக்கு ஆசையாய் ஊட்டிவிட்ட காதலன்..Cute Video

"ஷூட்டிங் துவங்கவுள்ள பிக் பாஸ் 6"!!இவங்கெல்லாம் வராங்களா இந்த வாட்டி"!! 13

கொரோனா காலகட்டம் நீடிக்கப்பட்ட நிலையில், தனது விக்ரம் படம் துவங்கிய காரணத்தால் கமல் பாதியிலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து விலக ஏற்பட்டது. “Bigg Boss Ultimate” என்ற பெயரில் 24 மணிநேரமும், 100 நாட்களும் Disney+Hotstar’இல் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் மிக பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கபட்டது. கமல்ஹாசன் விலகவே இளம் நாயகர் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார். இது ரசிகர்களின் பாராட்டை இன்னும் கொஞ்சம் பெற்றது. சென்ற சீசனில் மிகவும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு போட்டியாளர்கள் சிலர் களமிறக்கப்பட்டனர்.

விளம்பரம்

"ஷூட்டிங் துவங்கவுள்ள பிக் பாஸ் 6"!!இவங்கெல்லாம் வராங்களா இந்த வாட்டி"!! 15

இதில் பாலா வெற்றிபெற்றார். அன்று முதலே இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்ற கேள்வி ரசிகர்களிடம் பெரிதாக இருந்தது. அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த போதும் கமலே இந்த முறை மீண்டும் தொகுப்பாளராக களமிறங்குகிறார் என செய்திகள் வந்தன. அண்மையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ரக்ஷன் இம்முறை பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவிருக்கிறார் என செய்திகள் வெளியாகின.

விளம்பரம்

"ஷூட்டிங் துவங்கவுள்ள பிக் பாஸ் 6"!!இவங்கெல்லாம் வராங்களா இந்த வாட்டி"!! 17

அவரைத் தொடர்ந்து தற்போது வந்த தகவலின் படியும் விஜய் டிவி பிரபலமே இரண்டாவதாக பிக் பாஸ் வீட்டில் நுழைய உள்ளனர். ஆம் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொள்விருக்கிறார் என தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவர் செந்திலுடன் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார் ராஜலக்ஷ்மி. முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் இவரிடம் நடத்தப்பட்டுவருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

விளம்பரம்
தொடர்புடையவை  வீட்ல எதாவது ஒரு வேலை பாக்கறியா? என்ன தப்பு சொல்ல வந்துட்ட? ரம்யாவை கழுவி ஊற்றிய தாமரை

"ஷூட்டிங் துவங்கவுள்ள பிக் பாஸ் 6"!!இவங்கெல்லாம் வராங்களா இந்த வாட்டி"!! 19

அதே போல பிரபல பிண்ணனி பாடகி சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமாரிடமும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. சர்ச்சைகள் என்றால் அது இன்றைய தினங்களில் சுசித்ரா தான். அதனால் அவர் ஏற்கனவே இடம் பெற்று விட்டதால் இப்பொது கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சென்ற போட்டியில் தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொண்டு மக்களின் மனங்களை வென்று எடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இப்பொது விஜய் டிவி தங்களிடம் உள்ள மற்றொரு பிரபல தொகுப்பாளினி DD இந்த முறை களமிறக்க விஜய் டிவி நிறுவனம் தயராகி வருவதாக கூறப்பட்டு வருகிறது.

"ஷூட்டிங் துவங்கவுள்ள பிக் பாஸ் 6"!!இவங்கெல்லாம் வராங்களா இந்த வாட்டி"!! 21

அதே போல இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவியிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அடுத்த மாதம் ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் துவங்கவுள்ளதாகவும் செய்திகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன.

"ஷூட்டிங் துவங்கவுள்ள பிக் பாஸ் 6"!!இவங்கெல்லாம் வராங்களா இந்த வாட்டி"!! 23

விளம்பரம்

Leave a Comment