கேபிக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்.! விஜய் டிவியில் இருந்து விலகி வேறு சேனலுக்கு செல்லும் கேபி.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் நடித்து வந்த நடிகை கேப்ரியல்லாவுக்கு தற்போது சன் தொலைக்காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விரைவில் அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புது சீரியலில் ஹீரோயினாக நடிக்க இருக்கும் செய்தி தற்போது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘7C’ என்கிற சீரியலின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியல்லா. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

கேபிக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்.! விஜய் டிவியில் இருந்து விலகி வேறு சேனலுக்கு செல்லும் கேபி.! 1

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி’ என்கிற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலையும் வென்று இருக்கிறார். இவருக்கு திருப்பு முனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது ‘ஈரமான ரோஜாவே’ பாகம் இரண்டு தான். இதற்கு முன்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் நான்கிலும் அவர் கலந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடர் முடிவுக்கு வந்திருந்தது. இந்த தொடருக்கு பின்னர் கேப்ரியல்லா என்ன செய்யப் போகிறார்? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவருக்கு தற்போது சன் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்திருக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது.


விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புது தொடரில் ஹீரோயின் நாக நடிக்கிறார் கேப்ரியல்லா. அவருக்கு ஜோடியாக ‘நந்தினி’, ‘கண்ணே கலைமானே’ ஆகிய தொடர்களில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவி நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்திருக்கிறது. சமீபத்தில் ராகுல் ரவி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த சர்ச்சைகள் ஒரு புறம் இருக்கும் நிலையில் அவர் நடிக்கும் அடுத்த சீரியலின் அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்