‘இதுவரை மனதில் தாங்கிய கணவரை கையில் தாங்கப் போகும் பிரேமலதா” நெகிழ்ச்சி வீடியோ இதோ.!

கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஒன்றரை மாதங்கள் ஓடிவிட்டது. இந்த நிலையில் விஜயகாந்துகாக பிரேமலதா விஜயகாந்த் தனது கையில் அவருடைய முகத்தை டாட்டூவாக பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதுவரை என் மனதில் தாங்கிய கணவரை, இனி கையிலும் தாங்கப் போகிறேன் என்று அவர் சொல்லாமல் சொல்லி இருக்கும் அந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். சினிமா, அரசியல் என்று இரண்டிலுமே எதிரிகளை சம்பாதிக்காத ஒரு நபர் என்று சொன்னால் அதே கேப்டன் விஜயகாந்த் தான். 1979ம் ஆண்டு திரைத்துறைக்குள் வந்த அவர், பல படங்களில் நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகராக உயர்த்தி கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'இதுவரை மனதில் தாங்கிய கணவரை கையில் தாங்கப் போகும் பிரேமலதா" நெகிழ்ச்சி வீடியோ இதோ.! 1

விளம்பரம்

2005ம் ஆண்டுக்குப் பின்னர் அரசியலுக்கு வந்த அவர், கடந்த வருடம் டிசம்பர் 28ம் தேதி எதிர்பாராத விதமாக காலமாகி இருந்தார். கொரோனா தொற்று, நுரையீரல் பாதிப்பு, நிமோனியா என்று காலன் அவரை கொண்டு சென்று விட்டான். அவரது மரணம் தமிழகத்தையே உலுக்கியிருந்தது. பொதுமக்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகமான கோயம்பேடு அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பலரும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் தற்போது நெகிழ்ச்சியான விஷயம் ஒன்றை செய்திருக்கிறார்.

தொடர்புடையவை  நாடு இரண்டா பிரிய போகுது..! யோகிபாபுவின் அசத்தலான நடிப்பில் BOAT படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

'இதுவரை மனதில் தாங்கிய கணவரை கையில் தாங்கப் போகும் பிரேமலதா" நெகிழ்ச்சி வீடியோ இதோ.! 3
அதை தற்போது வீடியோவாகவும் வெளியிட்டு இருக்கிறார். அதில் கேப்டனின் உருவத்தை தனது கையில் டாட்டூவாக பதிவிட்டுக் கொண்டிருக்கிறார் பிரேமலதா் இந்த வீடியோவை கேப்டனின் மகன் விஜய பிரபாகரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இத்தனை நாட்களாக தனது மனதில் தாங்கிய அன்பு கணவரை, இனி கையிலும் உருவமாக தாங்க போகிறீர்களா? என்று கேப்டனின் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Instagram Video Embed Code Credits: Vijaya Prabhakaran

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment