‘சூர்யவம்சம்’ குழந்தை நட்சத்திரம் ஹேமாவின் மகள் பிறந்தநாள் புகைப்படங்கள்.!

சரத்குமார் நடித்த “சூர்யவம்சம்” படத்தில் சின்ன சக்திவேல் கவுண்டராக நடித்த நடிகை ஹேமலதா தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிறு குழந்தையாக நடித்து வந்த அவர் தற்போது குடும்பம் குழந்தையுடன் செட்டில் ஆகி இருக்கிறார்.

'சூர்யவம்சம்' குழந்தை நட்சத்திரம் ஹேமாவின் மகள் பிறந்தநாள் புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையை ஆரம்பித்து, இன்று பலர் முன்னணி நட்சத்திரங்களாக உயர்ந்திருக்கின்றனர். பலரும் குழந்தையாக நடித்த போது பல தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தனர். அந்த வகையில் ‘சூர்யவம்சம்’ படத்தில் சக்திவேல் கவுண்டரின் பேரனாக, சின்ன சக்திவேல் கவுண்டராக நடித்தவர் தான் ஹேமலதா.

'சூர்யவம்சம்' குழந்தை நட்சத்திரம் ஹேமாவின் மகள் பிறந்தநாள் புகைப்படங்கள்.! 3

விளம்பரம்

இவர் 1995ம் ஆண்டு ‘பாட்ஷா’ படத்தில் ரகுவரனுக்கு மகளாக நடித்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த படத்தினை தொடர்ந்து ‘சூர்யவம்சம்’ படத்தில் சரத்குமாரின் மகனாக நடித்து வரவேற்பை பெற்றார். அந்த படத்தில் இவரின் நடிப்புக்கு இன்றளவும் ரசிகர் பட்டாளம் இருக்கவே செய்கிறது.

'சூர்யவம்சம்' குழந்தை நட்சத்திரம் ஹேமாவின் மகள் பிறந்தநாள் புகைப்படங்கள்.! 5

விளம்பரம்

தனது தாத்தா என்று தெரியாமலேயே சக்திவேல் கவுண்டரிடம் பழகி வரும் இவர் அவருக்கு பாயாசம் கொண்டு வந்து கொடுத்து “பாயாசம் சாப்பிடுங்க பிரண்ட்” என்னும் சொல்லும் வசனமும், சக்திவேல் கவுண்டர் மையை தெளிக்கும் பொழுது இவரின் மீது பட்டு விடும், அப்போது “பரவாயில்லை பிரண்ட், வேண்டுமென்றே யாராவது இப்படி செய்வார்களா என்று சொல்லும் வசனமும் இன்றளவும் ஃபேமஸாக இருக்கிறது.

தொடர்புடையவை  வீட்டை விட்டு துரத்தும் குணசேகரன்.! ஜீவானந்தமுடன் கை கோர்க்க முடிவெடுத்த மருமகள்கள்.!

'சூர்யவம்சம்' குழந்தை நட்சத்திரம் ஹேமாவின் மகள் பிறந்தநாள் புகைப்படங்கள்.! 7

விளம்பரம்

பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார் ஹேமலதா. ‘இனியவளே’, ‘பூமகள் ஊர்வலம்’, ‘சேது’, ‘காதல் கொண்டேன்’, ‘மதுர’, ‘பாரிஜாதம்’, ‘திமிரு’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் ‘சித்தி’, ‘மனைவி’, ‘கனா காணும் காலங்கள்’, ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘அன்பே வா’, ‘புகுந்த வீடு’, ‘தென்றல்’, ‘முந்தானை முடிச்சு’ போன்ற நாடகங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

'சூர்யவம்சம்' குழந்தை நட்சத்திரம் ஹேமாவின் மகள் பிறந்தநாள் புகைப்படங்கள்.! 9

விளம்பரம்

இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நாடகம் என்று சொன்னால் அது ‘கனா காணும் காலங்கள்’ தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய இந்த சீரியலில் அவர் ராகவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார். ஹேமலதா என்கிற அவருடைய இயற்பெயரே மறந்து ராகவி என்கிற பெயர்தான் பலருக்கும் நினைவில் இருக்கும் அளவிற்கு அவர் அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

'சூர்யவம்சம்' குழந்தை நட்சத்திரம் ஹேமாவின் மகள் பிறந்தநாள் புகைப்படங்கள்.! 11

விளம்பரம்

கடைசியாக 2015ம் ஆண்டு வெளியான ‘தென்றல்’ நாடகத்தில் தீபா என்னும் கதாபாத்திரத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்திருந்தார். இதுவே இது இவர் நடித்த கடைசி சீரியல். பின்னர் திரைத்துறையில் இருந்து முற்றிலுமாக விலகி தற்போது குடும்பத்துடன் செட்டிலாகி இருக்கிறார் ஹேமலதா.

தொடர்புடையவை  சார் உங்க பூர்வீகம் ஹைதரபாத்தா? அடேய் நான் தமிழன்டா..கோமாளிகளிடம் மாட்டிய பட் | Cook With Comali

'சூர்யவம்சம்' குழந்தை நட்சத்திரம் ஹேமாவின் மகள் பிறந்தநாள் புகைப்படங்கள்.! 13

விளம்பரம்

பலரும் ஹேமலதா என்ன ஆனார் என்று தெரியாமல் இருக்க தற்போது இன்ஸ்டாகிராமில் தனது குடும்பம் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமலதாவை குடும்பத்துடன் பார்ப்பதில் மகிழ்ச்சி என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

'சூர்யவம்சம்' குழந்தை நட்சத்திரம் ஹேமாவின் மகள் பிறந்தநாள் புகைப்படங்கள்.! 15

விளம்பரம்

30 வயதாகும் ஹேமாவிற்கு தற்போது திருமணமாகி, ஒரு பெண் குழந்தையும் இருக்கும் நிலையில், மகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். பலரும் ஹேமாவின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் மீண்டும் திரைத்துறைக்கு வருமாறு ஹேமாவுக்கு அழைப்பும் விடுத்தது வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment