விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ்.! பல சீரியல்களின் நேரத்தை அதிரடியாக மாற்றிய விஜய் டிவி

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 7 ஒளிப்பரப்பாக இருப்பதை ஒட்டி தற்போது பல சீரியல்களின் நேரத்தை மாற்றி அமைத்திருக்கிறது விஜய் டிவி. அந்த ஒவ்வொரு ப்ரோமோக்கள் தற்போது வெளியாகி வருகிறது. சின்னத்திரை திரையுலகின் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோவாக இருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. மேலை நாடுகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 6 ஆண்டுகளில் ஆறு சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது் இந்த முறை எந்த பிக்பாஸிலும் இல்லாத அளவிற்கு இரண்டு வீடுகளுடன் 20 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாக இருப்பதாக சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கமல் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ்.! பல சீரியல்களின் நேரத்தை அதிரடியாக மாற்றிய விஜய் டிவி 1

பிக் பாஸ் சீசன் 7 விரைவில் தொடங்கப்பட இருப்பதால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களின் நேரத்தை விஜய் டிவி மாற்றி அமைத்துள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பிக்பாஸ் விரைவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில் வழக்கம் போல் அக்டோபர் மாதமே சீசன் 7 தொடங்குகிறது. இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் இரவு 9:30 மணியில் இருந்து ஏழு மணிக்கும், ஈரமான ரோஜாவே தொடர் 7:30 மணியிலிருந்து இரவு 9:30 மணிக்கும், ஆஹா கல்யாணம் தொடர் இரவு 7:00 மணியிலிருந்து 7:30 மணிக்கும் மாற்றம் பெற்றுள்ளது.

 

தற்போதைய நிலவரப்படி 6:00 மணிக்கு தமிழும் சரஸ்வதியும், 6:30 மணிக்கு மோதலும் காதலும், 7:00 மணிக்கு மகாநதி, 7:30க்கு ஆஹா கல்யாணம், 8:00 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ், 8:30 மணிக்கு பாக்கியலட்சுமி, 9:00 மணிக்கு சிறகடிக்க ஆசை, 9:30க்கு ஈரமான ரோஜாவே 2, 10:00 மணிக்கு கிழக்கு வாசல் ஆகிய தொடர்கள் மாலை நேரங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. ஒரு வேலை பிக பாஸ் தொடங்கப்பட்டால் மதியம் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் நிறுத்தப்பட்டு இந்த சீரியல்களின் நேரமும் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக காற்றுக்கு என்ன வேலி செய்தல் முடிவுக்கு வர இருப்பதாக தெரிகிறது.

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்