நடிகர் விமல் மற்றும் சூரி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘படவா (Badava Trailer)’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விமல். இவர் ‘கில்லி’ படத்தில் துணை நடிகராக தனது வாழ்க்கை ஆரம்பித்து ‘பசங்க’ என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. களவாணி, தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா போன்ற பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. அதன் பின்னர் இவருக்கு பெரிய அளவில் நல்ல படங்கள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இவர் நடித்த மாப்பிள்ளை சிங்கம், மன்னர் வகையறா, களவாணி 2, தெய்வ மச்சான், குலசாமி போன்ற படங்கள் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றியை தரவில்லை. தற்போது கைவசம் சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, மஞ்சள் குடை, லக்கி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸ் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இருந்த போதிலும் அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் சூரி, விமல், நடிகை சரிதா, கேஜிஎஃப் வில்லன் ராம் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘படவா’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்தப் படத்தை இயக்குனர் கே.வி நந்தா இயக்க, ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார். ஜே ஸ்டுடியோ இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஜான் பீட்டர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Bravo Music