Categories: சினிமா

விஷ்ணு விஷாலின் 39-வது பிறந்தநாள்.! கேக் வெட்டி கொண்டாடிய லால் சலாம் படக்குழுவினர்.!

வெளியிட்டது

நடிகர் விஷ்ணு விஷால் இன்று தனது 39 ஆவது பிறந்த நாளை லால் சலாம் படக் குழுவினருடன் இணைந்து சிறப்பாக கொண்டாடி இருக்கிறார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஷ்ணு விஷாலின் 39-வது பிறந்தநாள்.! கேக் வெட்டி கொண்டாடிய லால் சலாம் படக்குழுவினர்.! 1
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிக் குழு என்கிற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய இவர் அடுத்தடுத்து பல நல்ல படங்களில் நடித்திருக்கிறார். சில படங்கள் தோல்வியை தந்த போதும் பல படங்கள் அவருக்கு வெற்றி படங்களாகவே இருந்து வருகிறது.

வெண்ணிலா கபடிக் குழு படத்திற்குப் பிறகு குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார் பட்டி சிங்கம், காடன், எஃப்ஐஆர். கட்டா குஸ்தி போன்ற பல நல்ல படங்களில் நடித்திருக்கிறார். இதில் பல படங்களை அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக சொந்தமாக தயாரித்தும் இருக்கிறார்.

தற்போது கைவசம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷாலின் மகன் பெயர் ஆரியன் என்பதால் தான் அடுத்து தயாரித்து நடிக்க இருக்கும் படத்திற்கு ஆரியன் என்று பெயர் வைத்திருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதில் மோகன்தாஸ் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆரியன் மற்றும் லால் சலாம் ஆகிய இரண்டு படங்களும் தற்போது படப்பிடிப்புகள் பிஸியாக நடந்து வருகிறது. இதில் லால் சலாம் படப்பிடிப்பும் தற்போது முடிந்துள்ளது.


விஷ்ணு விஷாலின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவருக்கு ஏற்கனவே ரஜினி நடராஜ் என்பவருடன் திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்தது. அவர்களுக்கு ஆரியன் என்ற மகன் இருக்கும் நிலையில் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார் விஷ்ணு விஷால்.


இந்த நிலையில் இன்று விஷ்ணு விஷாலுக்கு 39 வயது முடிந்திருக்கிறது. அவரின் பிறந்த நாளை தற்போது படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பலரும் விஷ்ணு விஷாலுக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராக நடித்து வரும் லால் சலாம் படத்தில் அவருடைய பெயர் “திருநாவுக்கரசு” என்கிற அறிவிப்பை புதிய போஸ்டருடன் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்