சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “ஹூகும்” என்கிற பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்தப் பாடல் வெளியான சில நிமிடங்களில் பல மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கி வரும் படமான ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாகி வரும் நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலாக “ஹூகும்” பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலுக்கும் முதல் பாடல் போலவே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜயை வைத்து நெல்சன் கடைசியாக இயக்கிய பீஸ்ட் படம் தோல்வியைத் தழுவியது. அதற்கு பின்னர் நெல்சன் தற்போது ரஜினிகாந்தை வைத்து மிக கவனமாக ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறையின் ஜெயிலராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ் குமார், மோகன் லால், வசந்த் ரவி, யோகி பாபு, சுனில்,ஜாக்கி ஷெராஃப், விநாயகன் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 168 படங்களில் நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் தனது 169 படமாக ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் ரவிச்சந்திரன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்புகள் முடிந்து கேக் வெட்டி கொண்டாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.

அதன்பின்னர் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான “காவலா” பாடலை வெளியிட்டிருந்தனர் அருண் காமராஜ் எழுதியிருந்த இந்த பாடலை ஷில்பாராவ் பாடியிருந்தார். இந்த பாடலுக்கு தமன்னா மரண குத்தாட்டம் போட்டிருந்தார். பட்டி தொட்டி எங்கும் இந்தப் பாடல் மிகவும் ட்ரெண்டான நிலையில் தொடர்ந்து படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV