Life-ல அடுத்த கட்டத்துக்கு போறேன்.! சீரியலில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்து பேசிய அர்ச்சனா.!

வெளியிட்டது

முன்பெல்லாம் சீரியல் என்றாலே ஒரு வருடங்கள் இரண்டு வருடங்கள் எடுப்பார்கள். பின்பு அந்த நாடகத்தை முடித்துவிட்டு அடுத்த நாடகத்திற்கு சென்று விடுவார்கள். ஆனால் தற்போதெல்லாம் நாடகம் என்ற பெயரில் ஐந்தாண்டுகள், ஏழு ஆண்டுகள் வரை நீட்டிப்பதால் அதில் நடிப்பவர்கள் தங்களது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்காக சீரியல்களில் இருந்து அடிக்கடி விலகி விடுவது வழக்கமாகி வருகிறது. சிலருக்கு வெள்ளித் திரையில் வாய்ப்பு கிடைப்பதால் சீரியலை விட்டு விலகுகிறார்கள். இல்லையென்றால் வேறு தொலைக்காட்சியில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் அங்கே சென்று விடுகிறார்கள். அப்படி ஒரு விலகல்தான் ராஜா ராணி 2 சீரியலில் நடித்துக் கொண்டிருந்த அர்ச்சனாவின் விலகல். என்ன காரணம் என்று தெரியாமல் திடீரென்று சீரியலை விட்டு விலகி இருந்தார் அர்ச்சனா. இந்த தகவல் நேற்று முதல் இணையத்தில் வைரல் ஆகி வந்தது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

Life-ல அடுத்த கட்டத்துக்கு போறேன்.! சீரியலில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்து பேசிய அர்ச்சனா.! 1

 

ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வி ஜே அர்ச்சனா.இந்த நாடகம் தொடங்கிய போது இதில் கதாநாயகியாக இருந்தவர் ஆல்யா மானசா, அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் அவர் முதலில் இந்த சீரியலை விட்டு விலகினார். இதனால் டி.ஆர்.பி ரேட்டிங் சற்று அடி வாங்கியது. எனினும் அர்ச்சனா செய்யும் வில்லத்தனத்திற்காகவே இந்த சீரியல் விறுவிறுப்பாக நடந்து வந்தது. பின்னர் ஆல்யா மானசா இடத்தில் ரியா விஸ்வநாதன் என்பவர் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ரியாவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட, தற்போது ரியாவின் நடிப்பை ஏற்றுக்கொண்டு நாடகத்தை தொடர்ந்து பார்த்து வருகின்றனர் .நாடகம் மீது பல விமர்சனங்கள் இருந்தபோதிலும் விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டு தான் இருக்கிறது. மக்களும் இந்த நாடகத்தை பார்ப்பதை நிறுத்தவில்லை. இந்த நிலையில் விஜே அர்ச்சனா நேற்று சீரியலில் இருந்து திடீரென விலகியதாக தகவல் பரவிய நிலையில், அவர் தற்போது ஒரு விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.

 

இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், வாழ்க்கை பல ஆச்சரியங்கள் நிறைந்தது. நான் என்னுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைக்கிறேன். நான் ராஜா ராணி 2 குழுவை கண்டிப்பாக மிஸ் செய்வேன். அந்த குழுவினருக்கும் எனக்கு கொடுத்த சப்போர்ட்டிற்காக மிகுந்த நன்றி. இன்றைய தேதி வரை எனக்கு நீங்கள் கொடுத்து வரும் லவ் மற்றும் ஆதரவிற்கு மிகவும் நன்றி. அடுத்த புதிய அத்தியாயத்தில் சந்திப்போம், அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அர்ச்சனா என்று பதிவிட்டு இருக்கிறார். ஏற்கனவே அர்ச்சனாவுக்கும் பாரதி கண்ணம்மாவின் ஹீரோவான அருண்பிரசாத்திற்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்றும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் சிலர் கிளப்பி விட்டு இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் அவருக்கு புதிய சீரியல் வாய்ப்பு கிடைத்தது என்றும், மற்றொரு தரப்பினர் இல்லை அவர் பிக்பாஸில் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் தங்களது யூகங்களை தெரிவித்து வருகின்றனர். Watch the below video..

YouTube Video Code Embed Credits: Trend Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்