நேற்று சென்னையில் நடந்த 44வது சர்வதேச செஸ் ஒளிம்பியாட் நிகழ்ச்சி தான் ஒட்டுமொத்த இந்தியாவின் பேச்சு. துவக்கவிழா நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தாலும், கவர்ந்தது என்னவோ நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சிகள் தான். இதனை இயக்கி முடித்துள்ளவர் இயக்குனர், பாடலாசிரியர் விக்னேஷ் சிவன்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று முக்கிய பிரபலமாகி உள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளியான “போடா போடி” படம் மூலம் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானாலும் அவருக்கு முதல் வெற்றியை கொடுத்த படம் “நானும் ரௌடி தான்” . 2015ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா.ஆர்.பார்த்திபன் என பலர் நடிக்க, அனிருத் இசையில் வெளியான இந்த படம் மிக பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது மட்டுமில்லாமல் இந்த படம் மூலம் நயந்தஹராவிடம் அறிமுகமானார்.
அடுத்து சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்”. படம் நன்றாக இருந்த போதிலும் பெரிய வெற்றியை பதிவு செய்ய தவறியது. நடுவில் “பாவக்கதைகளில்” ஒரு எபிசொட் இயக்கி இருந்தார். மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து நயன்தாரா, சமந்தா கூட்டணியில் “காத்துவாக்குல ரெண்டு படம்” இயக்கினார். ஏப்ரல் மாதம் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பையே மக்களிடம் பெற்றது. இதனை அடுத்து தான் நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு முன்னரே நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவது விக்னேஷ் தான் என அந்த படத்தை தயாரிக்கவுள்ள லைகா ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போதிலிருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மிகவும் அதிகரிக்க ஆரம்பித்தது. ஏனெனில் நடிகர் அஜித் தொடர்ந்து ஆக்ஷன் படங்களையே நடித்து வருவதால் நல்ல ஜனரஞ்சகமான படங்கள் எடுக்கும் கொடுக்கும் விக்னேஷ் படத்தை ஓகே செய்திலேயே இந்த எதிர்பார்ப்பு.
திருமணம் முடிந்து இந்திய திரும்பியுள்ள விக்னேஷ் அந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபாடுப்பட்டு மிகவும் சிறப்பான கலைநிகழ்ச்சிகளை மக்களுக்கு விருந்தாக்கினர். தமிழர் பாரம்பரியம் சொல்லும் ராஜேந்திர சோழன், திருக்குறள், தொல்காப்பியம், இந்தியாவின் சிறப்பு மிக்க நடனங்கள், இசையமைப்பாளர்கள் இசை ஷோ, பாடல் ஷோ என அனைத்துமே சிறப்பாக செய்து அனைவரது பாராட்டுகளையும் குவித்து வருகிறார் விக்னேஷ். அந்த குழுவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இப்பொது வெளியாகி வைரலாகின்றன.