“அவனுக்கு அந்த பிரச்சனை மறுபடி மறுபடி வரும்”!!”தாலி கட்டிய நேரமே சரியில்ல”!! கவலைப்படும் விக்னேஷ் சிவனின் பெரியப்பா!!

வெளியிட்டது

இரண்டு தினங்கள் முன் நடைபெற்று முடிந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் தான் இப்போதுஹ் கோலிவுட்டின் ஹாட் நியூஸ். தென் இந்தியாவின் மிக முக்கிய, முன்னணி நாயகியான நயன்தாராவும், இயக்குனருமான விக்னேஷ் சிவனும் 2015ஆம் ஆண்டு வெளியான “நானும் ரவுடி தான்” படம் மூலம் அறிமுகமானார்கள். முதல் பாடம் வெளியாவதைக்குள்ளாகவே இருவருக்கும் காதல் மலர், படம் வெளியாகி மிக பெரிய வெற்றியையும் நடிகை நயன்தாராவிற்கு நிறைய விருதுகளும் கிடைத்தன.

"அவனுக்கு அந்த பிரச்சனை மறுபடி மறுபடி வரும்"!!"தாலி கட்டிய நேரமே சரியில்ல"!! கவலைப்படும் விக்னேஷ் சிவனின் பெரியப்பா!! 1

அப்போது வழங்கப்பட்ட ஒரு விருது விழாவில், கிசுகிசுப்பாக இருந்த விஷயத்தை மேடையில் உடைத்தனர் இருவரும். பின் மீண்டும் படங்களில் பிஸியான நயன்தாராவிற்கு எப்போது திருமணம் என்று பலரும் கேள்வி எழுப்பி  வந்த நிலையில், நேற்றைய முன்தினம் 7 ஆண்டு காதல் வாழ்க்கையை திருமணத்தில் முடித்தனர் விக்னேஷும் நயன்தாராவும். சென்னையை அடுத்த மஹாபலிபுரத்திலுள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் முக்கிய சினிமா பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்ச்சியாக திருமணம் இருவருக்கும் நடைபெற்று முடிந்தது.

அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, ஷாருக் கான், அட்லீ, போனி கபூர், மலையாள நடிகர் திலீப், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் சேதுபதி என திரைத்துறை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஊடகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

திருமணத்தில் ஏற்கனவே விக்னேஷ் சிவன் தன்னுடைய உறவினர்களை புறக்கணித்தாக அவருடைய பெரியப்பா பேசியிருந்தார். திருச்சி லால்குடியை சேர்ந்த விக்னேஷ் சிவனின் தந்தை சிறு வயதிலேயே இறந்து விட அவர் தன்னுடைய அம்மா மற்றும் பெரியப்பா குடும்பத்தால் வளர்க்கப்பட்டார். இருப்பினும் இப்போது நடந்து முடிந்துள்ள அவருடைய திருமணத்தில் அவருடைய பெரியப்பா மற்றும் பெரியம்மாவை அழைக்கவில்லை என அவர்கள் மனம் வருந்தி பேசிருந்தனர்.

இப்பொது திருமணம் முடிந்துள்ள நிலையில், தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ள விக்னேஷின் பெரியப்பா பேசும் போது, ” நான் ஆரம்பத்திலிருந்தே அவனுடைய திருமணத்தை உற்று நோக்கி வருகிறேன், அவன் தாலி கட்டிய நேரம் சரியில்லை, 9-10 முகூர்த்த நேரம் என்றால் அவன் தாலி கட்டிய நேரம் 10:25, அது குளிகை நேரம், குளிகை நேரத்துல ஒரு விஷயம் செய்தால் அது மீண்டும் மீண்டும் நடக்கும், கல்யாணத்தை நல்ல ஆடம்பரமாக செய்துள்ள அவர்கள், பெரியவர்கள் யார் துணையும் இன்றி இதை செய்துள்ளனர்” என பேசியுள்ளார்.

Video Courtesy – Dinamalar

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்