கனடா நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பைபர். இன்றைய இசையுலகில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை இவர் கொண்டுள்ளார். யூடியூப் மூலம் மிகவும் பிரபாலமடைந்தவர் இவர், வெளியிட்ட “பேபி, 1 டைம்” போன்ற பாடல்கள் மிக பெரிய அளவில் மாபெரும் வெற்றியடைந்தவை. உலகெங்கிலும் தற்போது பாப் பாடல்களை மேடைகளில் பாடி உலகெங்கிலும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். பாப் பாடல்களுக்காக பல விருதுகளையும் இவர் வாங்கியுள்ளார்.

பாப் பாடகர் மட்டுமின்றி, ஹோலிவுட்டில் நடிகராவும் திகழும் இவர் சிறு வயதிலேயே பாப் பாடல் உலகில் மிக பெரிய இடத்தை தனக்கென உருவாக்கி வைத்துள்ளார். உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பலகோடியினர் இவரை பின் தொடர்கின்றனர். உலகளவில் அதிகமாக தொடரப்படும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களில் இவரும் ஒருவர்.

இப்பொது பாடல் மட்டுமின்றி திரையுலகின் நடிக்க இவர் ஆர்வம் கட்டி வருகிறார். அதற்காக சில முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. ஹோலிவுட்டில் 2016ஆம் ஆண்டு வெளியான “ஜூ லேண்டர் 2” என்ற ஜஸ்டினாகவே இவர் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அண்மையில் இவரின் பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த லைவ் நிகழ்ச்சிகள், பாடல் வெளியீடுகள் என அனைத்தும் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டு வந்தன. இது குறித்து பல்வேறு வகையிலான கேள்விகளும், சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் ஜஸ்டின் தரப்பிலோ, அல்ல ஊடகத்திலோ சரியான விடை எதுவும் கொடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து ஜஸ்டின் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பேசியுள்ளார். வீடியோ பதிவான நான் “Ramsay Hunt Type Syndrome 2″ என்ற ஒரு வகை நோயினால் பாதிக்கபட்டுள்ளதாகவும், இதனால் இவருடைய முகத்தின் ஒரு பக்கம் செயல் புரியவில்லை எனவும் இவர் கூறியுள்ளார். விடியோவிலேயே ஒரு பக்க கண் மற்றும் வாய் செயல் படவில்லை என்பதை நம்ம காண முடிந்தது. இதனால் தான் சிறுது காலம் வெளிப்புற நிகழ்ச்சிகளில் இருந்து ஒய்வு பெறுவதாகவும், இது விரைவில் குணமடைந்து விடும் ஆனால் எப்போது என்று தெரியவில்லை, அடுத் வரை நான் நிகழ்ச்சிகளில் தோன்றமாட்டேன்” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

இவரின் இந்த பதிவு தான் இப்பொது உலகளவில் மிகவும் பேசப்படும் விஷயமாக உள்ளது. சிறுவயதிலேயே உலக ரசிகர்களை தன்னுடைய பாடல் திறனால் கட்டி போட்ட இவருக்கு இப்படி ஒரு பாதிப்பு வந்துள்ளது இவருடைய ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழித்தி உள்ளது.