நடிகர் அருண் விஜயின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படம் “யானை” . நீண்ட கால போராட்டங்கள் பிறகு வெற்றிகளை பெற்று வரும் அவர், இப்பொது மாஸ் ஹீரோவாக மாற முயன்று கொண்டிருக்கிறார். அதற்கு அடித்தளமாகவே இயக்குனர் ஹரியுடன் கைகோர்த்து உருவாகியுள்ள “யானை” படம். ஆறு, வேல், சிங்கம், அருள், சாமி போன்ற தமிழ் சினிமாவின் மிக சிறப்பான மாஸ் கமர்சியல் கொடுத்தவர் இயக்குனர் ஹரி.

சில ஆண்டுகளாக வெற்றிக்காக அவரும் காத்துவருகிறார். ஆக்ஷன், எமோஷனல் படங்கள் கொடுத்து வந்த சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் “யானை” படம் எடுத்துள்ளார். அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர், யோகிபாபு, சமுத்திரக்கனி, ராதிகா, அம்மு அபிராமி போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இன்று வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக நடிகர் அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளில் கலக்கியுள்ளார். இயக்குனர் ஹரியும் தன்னுடைய அச்டின் மசாலா பார்மட்டிற்கு திரும்பியுள்ளார் என ரசிகர்கள் பாராட்டிவருகிறார்கள்.
சோலோ ஹீரோவாக களமிறங்கிய பிறகு நடிகர் அருண் விஜயின் சிறந்த ஆக்ஷன் படங்களில் இது நிச்சயம் இடம் பெரும் எனக் கூறி வருகிறார்கள். எமோஷன் காட்சிகளும் நன்கு உதவ படம் நல்ல குடும்ப படமாக வெளிவந்துள்ளது எனவும் பாராட்டியுள்ளனர். சில பிரச்சனைகளால் ரிலீஸ் தேதி தடை பட்டு வந்த நடிகர் அருண் விஜயின் மற்ற படங்கள் “பார்டர், பாக்சர் மற்றும் சினம்’ போன்ற படங்களை இந்த படத்தின் வெற்றியின் மூலம் அதன் தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள் எனவும் கருத்து கூறிவருகிறார்கள்.
நீண்ட ஆண்டுகள் சினிமாவில் இருந்து வெற்றி கிடைக்காமல் போராடி வந்த அருண் விஜய்க்கு அவ்வப்போதே “தடம். தடையற தாக்க, செக்க சிவந்த வானம்” போன்ற படங்கள் வெற்றியை கொடுத்தன. ஆனால் இவை மாஸ் கம்ர்சியல் படங்கள் இல்லை. சிறந்த உடற்கட்டும், ஆக்ஷன் நாயகனுக்கான தோற்றம் கொண்டுள்ள இவருக்கு இந்த படம் மிக பெரிய அளவில் உதவும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.