நடிகர் யோகி பாபு தற்போது கதாநாயகனாக நடிக்கும் லக்கி மேன் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. காமெடி கலந்த ஜானரில் மீண்டும் யோகி பாபு முன்னணி கதையில் நடித்திருக்கிறார். இயக்குனர் பாலாஜி வேணுகோபால் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்தை திங் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்து இருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகி பாபு. ,இவர் தற்போது பல படங்களில் காமெடி நடிகராகவும், பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்கிற நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக அறிமுகமாகி பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தில் நடித்ததன் மூலமாக யோகி பாபு என்ற அடையாளத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் கடைசியாக மாவீரன் மற்றும் தோனி தயாரித்திருக்கும் எல்ஜிஎம் ஆகிய படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது கைவசம் ஜெயிலர், ஜவான், அயலான், கங்குவா, அரண்மனை 4, அந்தகன், சதுரங்க வேட்டை பாகம் 2, மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள், விஷால் 34, வானவன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தொடர்ந்து தற்போது பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் லக்கி மேன் என்கிற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. ஷான் ரால்டன் இசையில் திங் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்தப் படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதை கண்டறியும் ஒரு மனிதனின் கதையை பேசுவதாக இருக்கிறது. மேலும் இந்த படம் கண்டிப்பாக ஒரு ஃபீல் கூட்டம் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து வீரா, ரேச்சல் ரெபேக்கா, பாலாஜி, அப்துல் லீ, ஆர் எஸ் சிவாஜி, அமித் சாத்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தீப் விஜய் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று முடிந்ததுள்ளது. தற்போது போஸ்ட் productions பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தில் இருந்து தற்போது டீசரை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Think Music India