அறிவு, சந்தோஷ் நாராயணன் இசையில் அடுத்த என்ஜாயி எஞ்சாமி பாடல்..! அனல் மேலே பனித்துளி படத்தில் முதல் பாடல் வெளியானது

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் படம்தான் அனல் மேலே பனித்துளி. இந்த படத்தின் கீச்சே கீச்சே என்ற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி இருக்கிறார். இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா கடைசியாக அரண்மனை 3 படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் வெற்றிமாறன் தயாரித்து வரும் ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் sony லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மே ஒன்பதாம் தேதி நடிகர் தனுஷ் வெளியிட்டு இருந்தார். கைசர் ஆனந்த் இந்த படத்தை இயக்க வெற்றிமாறன் தனது நிறுவனத்தின் மூலமாக இந்த படத்தை தயாரிக்க உள்ளார். ஆண்ட்ரியாவை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அறிவு, சந்தோஷ் நாராயணன் இசையில் அடுத்த என்ஜாயி எஞ்சாமி பாடல்..! அனல் மேலே பனித்துளி படத்தில் முதல் பாடல் வெளியானது 1

விளம்பரம்

ஆண்ட்ரியா தற்போது கைவசம் எட்டு படங்களுக்கு மேல் வைத்துள்ளார். பிசாசு 2 மற்றும் கா படங்கள் தயார் நிலையில் இருப்பதால் அந்த படங்களின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 படத்தில் திரில்லிங்கான ஒரு ரோலிலும்,  கா படத்தில் புகைப்பட கலைஞராகவும் அவர் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் trailer ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது அனல் மேலே பனித்துளி படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும், அறிவுக்கும் கடந்த ஒரு வாரமாக பிரச்சனை நிலவி வரும் நிலையில், அவர்கள் இருவரும் வெற்றிமாறனின் படத்தில் இணைந்து பணியாற்றி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த பாடல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த பாடல் வெளியாகியுள்ளது.

தொடர்புடையவை  எங்க அத்தை மாமா நல்லா இருக்கனும்..! ஆதியின் பெற்றோருக்கு ஆயுள் விருத்தி பூஜை செய்த நடிகை நிக்கி கல்ராணி...!

அறிவு, சந்தோஷ் நாராயணன் இசையில் அடுத்த என்ஜாயி எஞ்சாமி பாடல்..! அனல் மேலே பனித்துளி படத்தில் முதல் பாடல் வெளியானது 3

விளம்பரம்

தீ மற்றும் அறிவு பாட சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளிவந்த பாடல் தான் என்ஜாய் எஞ்சாமி. இந்த பாடல் கடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது துவக்க விழாவில் பாடப்பட்டது. அதில் அறிவு பங்கேற்காததால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது அவர் வெளிநாட்டில் இருந்ததால் பங்கேற்க முடியவில்லை என்று நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் கூறி வந்தனர். அறிவு வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக கூறி வந்த நிலையில், தீ, சந்தோஷ் நாராயணன், செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த விக்னேஷ் சிவன் உட்பட அனைவரும் அறிவு வெளிநாட்டில் இருந்ததால்தான் பங்கேற்க முடியவில்லை என்று விளக்கம் அளித்த போதிலும், அறிவின் ரசிகர்கள் அவரை புறக்கணிக்கதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சந்தோஷ் நாரயணனும் அறிவும் இணைந்து பணியாற்றியுள்ள அடுத்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Divo Music

விளம்பரம்

Leave a Comment