“இது மாதிரி தேவையில்லாத விளம்பரம் செய்யாதீர்கள்….எச்சரித்த யோகிபாபு”!!

வெளியிட்டது

விஜய் டிவி லொள்ளு சபாவில் சிறிய சிறிய பாத்திரங்களில் நடித்து பிறகு சினிமா ஓரிரு காட்சிகளில் தலை கட்டிவந்தவர் நடிகர் யோகிபாபு. இயக்குனர் சுந்தர்.சி இவருக்கு கலகலப்பு திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரம் கொடுத்து முதல் அறிமுகம் கொடுத்தார். பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனின் “மான் கராத்தே”, விஷாலின் “பட்டத்து யானை” போன்ற  படங்களில் சிறு சிறு காமெடி வேடங்கள் நடித்தார்.

"இது மாதிரி தேவையில்லாத விளம்பரம் செய்யாதீர்கள்....எச்சரித்த யோகிபாபு"!! 1

இயக்குனர் எம்.மணிகண்டன் இவரை “காக்க முட்டை (2015) படத்தில் முக்கிய பாத்திரத்தில் முதல் முறை நடிக்க வைத்தார். படம் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்த நிலையில் மீண்டும் இயக்குனர் எம். மணிகண்டனுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “ஆண்டவன் கட்டளை” படத்தில் நடித்து நல்ல விமர்சங்களை பெற்றார். அடுத்தடுத்து வெளியான, “கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள்” போன்ற படங்கள் நல்ல வெற்றியாக அமைய மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு நன்கு ரசிக்கப்படும் கலைஞராக மாறினார்.

அதன் பின் விஜய், ரஜினி, சூர்யா, விஷால் போன்ற நடிகர்கள் படங்களிலும் சில கதை நாயகனாக நடித்த படங்களும் இவருடைய நடிப்பில் வெளியாகின. தர்மபிரபு, குர்கா, மண்டேலா என நிறைய படங்களில் நாயகனாகவும் தோன்றியுள்ளார். இதில் அண்மையில் வெளியான மண்டேலா படம் நல்ல விமர்சங்களை பெற்றது. இப்பொது நடிகர் விஜயின் “வாரிசு”, சிவகார்திகேயனுடன் “அயலான்”, லெஜெண்ட் சரவணன் நடிப்பில் “தி லெஜெண்ட்” என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த சூழலில் இப்பொது நடிகர் யோகிபாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “தாதா”. அவர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளார். அப்படத்தில் நாயகனாக நடிகர் நிதின் சத்யா நடித்துள்ளார். ஆனால் யோகிபாபுவின் மார்க்கெட்டை வைத்து அவரே நாயகனாக நடித்துள்ளது போல, படக்குழு அவருடைய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு யோகி பாபு முழு நீல பாத்திரத்தில் நடிப்பது போல ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளது.

இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் யோகிபாபு, “இந்த படத்தில் நண்பர் நிதின் சத்யாவே நாயகனாக நடித்துள்ளார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். தயவு செய்து இதுபோன்ற விளம்பரம் செய்யாதீர்கள்” என நாசுக்காக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் இப்பொது வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்