சன் டிவி நடிகையுடன் காதலில் விழுந்த வித்யா நம்பர் 1 சீரியல் நடிகர்.! அவரே வெளியிட்ட அறிவிப்பு.!

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் உடன் நடிக்கும் நடிகர் நடிகர்களை காதலித்து அவர்கள் திருமணமாகி ஜோடிகளாக வலம் வரும் நிகழ்வு நடந்து கொண்டே தான் இருக்கிறது. சின்னத்திரை, வெள்ளித்திரை என பல இடங்களிலும் உடன் நடிப்பவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். சூர்யா ஜோதிகா, அஜித் ஷாலினி எனத் தொடங்கி பலரையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

சன் டிவி நடிகையுடன் காதலில் விழுந்த வித்யா நம்பர் 1 சீரியல் நடிகர்.! அவரே வெளியிட்ட அறிவிப்பு.! 1

அந்த வகையில் சின்னத்திரையில் தற்போது புதிய ஜோடிகள் இருவர் திருமணம் செய்ய இருக்கின்றனர். யூட்யூபில் பிரபலமாக இருக்கும் இனியனும் விஜய் டிவி சீரியல் நடிகை ஒருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது் பல youtube சேனல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் இனியன்.நடிப்பது மட்டுமல்லாமல் நடனத்திலும் இவருக்கு ஈடுபாடு உண்டு.

பின்னர் பல குறும்படங்களிலும் youtube இல் வெப் சீரிஸிலும் நடித்து வந்த இனியனுக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வித்யா நம்பர் ஒன் சீரியலில் சஞ்சய் என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து அசத்தி கொண்டிருந்தார். பின்னர் அவருக்கு விபத்து ஒன்று ஏற்படவே அந்த சீரியலில் இருந்து விலகி அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

பின்னர் எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்து வரும் இனியன் தனது youtube இல் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் விஜய் தொலைக்காட்சியின் நடிகையுடன் திருமணம் செய்ய இருக்கும் தகவலை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி பிரதீப் என்பவரை இனியன் தற்போது திருமணம் செய்ய இருக்கிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி என்கிற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜனனி.


இந்த நிலையில் இனியன் நேற்று சில புகைப்படங்களை பகிர்ந்து என்னுடைய கண்மணியை நான் கண்டுபிடித்து விட்டேன். லைஃப் டைம் செட்டில்மென்ட் என்று அழகிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அவருக்கு சிவாங்கி, சாம் விஷால், கயல் சீரியல் அபிநவ்யா, எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்பிரியா உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரை உலகில் அடுத்த க்யூட் ஜோடிகள் ரெடியாகிவிட்டதாக பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்