‘அசுரனைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் நன்றி’ – ஸ்டாலினுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த தனுஷ்!!

'அசுரனைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் நன்றி' - ஸ்டாலினுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த தனுஷ்!! 1

தனுஷ் நடித்து கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியான படம் அசுரன். இந்த படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று தூத்துக்குடியில் சென்று பார்த்துள்ளார். அப்போது படம் அவரை வெகுவாக கவர்ந்துள்ளது, இதனால் அவர் ட்விட்டரிலும், தொலைப்பேசியிலும் இயக்குநர் வெற்றிமாறனையும், தனுஷையும் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

ட்விட்டரில் ஸ்டாலின் பதவிலிருந்து , ‘படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல் காரன்! கதைக்களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் பாராட்டுகள்’ என்று பதிவிட்டிருந்தார்.

விளம்பரம்

இந்த நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனுஷ் ட்வீட் செய்து உள்ளார். அதில், ‘காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். நான்காவது முறையாக தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி இருக்கும் இதில், தனுஷுக்கு ஜோடியாகப் பச்சையம்மாள் என்ற பெயரில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து உள்ளார். அது மட்டுமின்றி அபிராமி, கருணாஸ் மகன் கென், பாடகர் டீ,ஜே, பசுபதி, பாலாஜி சக்திவேல் என்று ஏராளமானோர் நடித்து உள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment