
நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அவர்கள் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசியல்வாதி ஸ்டாலின் அவர்கள் முன்பே இதற்காக கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகம் பி.டெக் மற்றும் எம். டெக் மாணவர்களுக்கான மூன்றாம் செமஸ்டர் பாடத்தின் ஒரு பகுதியாக தத்துவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பாடத்திட்டத்தின் படி மாணவர்கள் உபநிடதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, வேதங்கள், பிளேட்டோ மற்றும் பிரான்சிஸ் பேகன் ஆகியோரைப் படிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மதத்தை மாணவர்கள் மீது திணிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசன் அவர்கள்
“மாணவர்கள் எப்போதும் நல்ல புத்தகங்களைப் படிக்கத் தயாராக இருக்கிறார்கள். [கீதையிலிருந்து] உள்ளடக்கத்தை பாடத்திட்டமாக சேர்க்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் மதத்தை ஆணையிட முடியாது”
என்று கூறியுள்ளார். மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்கும் விதமாக கமல்ஹாசன் அவர்கள்
” மாணவர்கள் ‘மத போதகர்கள் அல்லது மத பிரச்சாரகர்கள்’ ஆக வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும்.மாணவர்கள் தங்கள் பாடநெறி தொடர்பான ஆய்வுப் பொருள்களைப் படிக்கட்டும். அவர்கள் படிப்பை முடித்த பிறகு, அவர்கள் என்ன ஆக விரும்புகிறார்கள் என்பது குறித்து முடிவெடுக்கட்டும். இது அவர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது,”
என்றும் கூறியுள்ளார்.