அதிக சிறப்பம்சங்களுடன் வெளியானது ஐஃபோன் 11!!

அதிக சிறப்பம்சங்களுடன் வெளியானது ஐஃபோன் 11!! 1

கலிபோர்னியா மாகானத்தின் க்யூபெர்டினோ நகரிலுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கத்தில் நடந்த ஆப்பிள் நிறுவனத்தின் 2019 திற்கான விழா நேற்று நடைபெற்றது. இந்த நிக‌ழ்ச்சியில் ஆப்பிள் சிஇஓ டிம் குக் ஆப்பின் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு அதனுடைய விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி விளக்கினார்.இதில் பல சேவைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் ஐபாட் என பல சேவைகள் புத்துயிர் பெற்று புதிய வடிவில் வளம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஆர்கேட்:

விளம்பரம்

ஆப்பிள் ஆர்கேட் சேவை புதிதாக ஆப்பிள் அப்பிளிகேஷனில் இணைக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் ஆன்லைன் கேமிங் சேவையான ‘ஆர்கேட்’ செப்.19ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கான கட்டணம் மாதம் சுமார் 499 டாலர் எனவும் அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 36000, இந்த சேவை முதல் மாதத்தில் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் டி.வி. பிளஸ்:

விளம்பரம்
தொடர்புடையவை  2,200 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து மன்னரின் கோவில் கண்டுபிடிப்பு!!

மிக குறைந்த கட்டணத்தில் $4.99-க்கு ஆப்பிள் டிவி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவை வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 100 நாடுகளில் இந்த சேவை முதல் கட்டமாக 100 நாடுகளில் இந்த சேவை கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த சேவைக்காக மாதம் சுமார் 4.99 டாலர்கள் வசூலிக்கப்படும். இது இந்திய ரூபாய் மதிப்பில் 360 ரூபாய். இதனால் அமேசான் ப்ரைம், நெட்ஃபிலிக்ஸ் போன்ற சேவையை வீழ்த்தி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபாட் 2019:

விளம்பரம்

அதி வேக செயல்திறனை கொண்ட ஐபாட் 7 th ஜெனரேஷன் 10.2 இன்ச் 329 டாலர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் இது சுமார் ரூ 29,000 என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 11:

விளம்பரம்

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு லென்ஸ்களும் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப்பில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று வைடு ஆங்கிள் சென்சார் மற்றொன்று அல்ட்ரா வைடு சென்சார் ஆகும். இத்துடன் புகைப்படங்களை அழகாக்க பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஐபோன்களில் முதல் முறையாக செல்ஃபி கேமராவில் ஸ்லோ மோஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் 11  (iPhone 11) விலை 699 டாலர்கள் என (சுமார் ரூ.₹64,900)  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  பூமியைப் போன்றதொரு கோளில் நீராவி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது!

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment