உலக மல்யுத்த போட்டியில் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர்கள் பஜ்ரங் புனியா, ரவிகுமார் தாஹியா ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.
3வது இடத்திற்கான போட்டியில் மங்கோலியாவின் துல்கா துமுர் ஒச்சிரை, 8-7 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தார் பஜ்ரங் புனியா.
ஒச்சிர் முதல் பாதியில் 6-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்துள்ளார். பிறகு இரண்டாவது பாதியின் ஆட்டத்தில் புனியா முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதே போல், மற்றோரு வீரரான ரவிக்குமார், 57 கிலோ பிரிவில் பங்கேற்றார். இதில் ஈரான் வீரர் ரெஸா அட்ரி நகர்ச்சியை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார் ரவிக்குமார். தனது முதல் போட்டியிலேயே பதக்கம் பெற்று அனைவரையும் அசத்தியிருக்கிறார்.
இந்த தொடரில் இது வரை மொத்தம் 3 பதக்கங்கள் இந்தியா பெற்றுள்ளது. கடந்த 2013ஆம் நடைபெற்ற தொடரிலும் இந்தியா 3 பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி குறித்து புனியா தெரிவிக்கையில், “இந்த தொடரில் எனக்கு நேர்ந்ததை என்னால் முடியாது. விளையாட முடியாத அளவிற்கு எனக்கு அழுத்தத்தைக் கொடுத்தார்கள். எனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை இந்த உலகமே பார்த்திருக்கிறது. மல்யுத்தம் சம்மேளம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், “பதக்கம் என்றால் எல்லாம் ஒன்று தான் என பயிற்சியாளர் சொன்னதன் விளைவாகவே நான் தொடர்ந்து விளையாடினேன். இந்தியாவிற்காக முன்றாவது பதக்கம் பெற்று கொடுத்ததில் பெருமை படுகிறேன்” என்றார்.