விடைபெறுகிறார் மொயீன் அலி

இங்கிலாந்தின் ஆல் ரவுண்டரான மொயீன் அலி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

32 வயதான சூழல் பந்துவீச்சாளரும், இடது கை மட்டை வீச்சாளருமான மொயீன் அலி சமீபத்தில் டெஸ்ட் பேட்டியின் ஒப்பந்தத்திலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் விலகி வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனது ஓய்வை அறிவித்தார்.

விளம்பரம்

இது குறித்து,ஈ.எஸ்.பி.என் தொலைக்காட்சிக்கு மொயீன் அலி அளித்த பேட்டியில், “இம்முடிவு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி செல்வதற்கு தான். எனது பேட்டிங்கை நான் ரசிக்க விரும்புகிறேன் என்று நினைக்கிறேன். எனவே இம்முடிவு எனக்கு சிறிது இடைவெளியைக் கொடுக்கும். மேலும், நான் தற்போது எனது குடும்பத்தோடு சிறிது நேரத்தையும் செலவழிக்க வேண்டும்” என்றார்.

விடைபெறுகிறார் மொயீன் அலி 1
மொயீன் அலி

“நான் ஐந்து ஆண்டுகளாக இங்கிலாந்திற்கு விளையாடி வருகிறேன். டெஸ்ட் போட்டியில் அதிக உழைக்க வேண்டியது இருக்கிறது. ஆகையால் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். பிறகு என்ன நடக்கிறது என்பதை பாப்போம்” என்று மெயீன் அலி தெரிவித்தார்.

விளம்பரம்

இவர் 60 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இது வரையில் மொத்தம் 280 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தொடர்புடையவை  கிறிஸ் கெயில் சாதனை சதம் வெறித்தனமாக அடித்த சிக்ஸர் ‘வேஸ்ட்’ ஒரே போட்டியில் 37 சிக்சர்கள்...!

மொயீன் அலியின் ஓய்வு முடிவு குறித்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர், ஆஷ்லே கில்ஸ், ” உலக கோப்பை போட்டியும், ஆஷஸ் தொடர் போட்டியும் வரிசையாக வருவதால் வீரர்கள் உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

விளம்பரம்

மேலும் தெரிவிக்கையில், ஆஷஸ் தொடர் போட்டி பெரியது கிடையாது. அதுவும் ஒரு விளையாட்டு தான். மொயீன் அலி இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கு சிறந்த வழங்கியுள்ளார்” என்றார்.

விளம்பரம்

Leave a Comment