க்ரையோட்ராகன் போரியாஸ் – மிகப்பெரிய பறக்கும் விலங்கு.9

க்ரையோட்ராகன் போரியாஸ் – மிகப்பெரிய பறக்கும் விலங்கு.9 1

விஞ்ஞானிகள் க்ரையோட்ராகன் போரியாஸ் என்று அழைக்கப்படும் ஒரு புதிய வகை ஸ்டெரோசரை கண்டு பிடித்துள்ளனர்.இது விமானம் அளவிலான ஊர்வன வகையை சார்ந்து. லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி இந்த விலங்கு மிகப்பெரிய பறக்கும் விலங்காகும்.

இதன் இறக்கை 10.மீ நீளமும் 250 கிலோ எடையையும் உடையது. கனடாவின் ஆல்பர்ட்டாவில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இதன் புதைபடிவ எச்சங்கள், இறக்கைகள், கால்கள், கழுத்து மற்றும் விலா எலும்புகளின் ஒரு பகுதியைக் கொண்ட எலும்புக்கூட்டைக் கொண்டவை. ஆனால் அவை டெக்சாஸில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டெரோசோரின் இனமான குவெட்சல்கோட்லஸைச் சேர்ந்தவை என்று பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கருதினர். இப்போழுது மேற்கொண்ட ஆய்வில் இது குவெட்சல்கோட்லஸைச் சேர்ந்தவையல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது.

விளம்பரம்

இது மிகவும் அரிய வகை ஸ்டெரோசராகும். மாமிசம் மற்றும் சிறிய விலங்குகள் இவற்றின் உணவாகும். அவற்றுள் பல்லிகள், பாலூட்டிகள் மற்றும் குழந்தை டைனோசர்கள் உள்ளடங்கும். இதன் எலும்புகளை நன்கு பாதுகாத்து, வெவ்வேறு அளவுகளில் பல நபர்களை உள்ளடக்கியது. இவையே கிரையோட்ராகன் போரியாக்களை ஒரு முக்கியமான விலங்காக ஆக்குகிறது,

தொடர்புடையவை  மீண்டும் இங்கிலாந்தின் பிரதமரானார் போரிஸ் ஜான்சன்!
க்ரையோட்ராகன் போரியாஸ் – மிகப்பெரிய பறக்கும் விலங்கு.9 3

இவை வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பெருமளவில் பரவியிருந்தாக கூறப்படுகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment