சத்தீஸ்கரில் நிலக்கரி சத்தியாகிரகம்! குறுந்தொடர் 1

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அதானி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மாவட்டம் தம்னர் பகுதியில், மூன்று நிலக்கரி திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இத்திட்டத்திற்கு மொத்தம் 6,802 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இது 23,500 கால்பந்து மைதானங்களுக்கு சமமாகும். இதனால் சுமார் 56 கிராமத்தின் மக்கள் ஒன்றிணைத்து நிலக்கரி திட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்ய முடிவெடுத்தனர்.

விளம்பரம்

இதனை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான குடும்பங்களை சார்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பெல்மா கிராமத்தினர், நிலக்கரியை தோண்டி எடுத்து வந்து மாவட்ட அலுவலகம் முன் போராட்டம் ஈடுபட்டனர்.

இது குறித்து அக்கிரமத்தை சார்ந்த ஹரிஹர் படேல் கூறுகையில், “இந்த திட்டத்தை யார் இயக்குகிறார்கள் என்பது குறித்து கவலை இல்லை. அது அரசாக இருந்தாலும், தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி எங்களை பொறுத்த வரையில் நிலக்கரி சுரங்கம் தேவை இல்லாத ஒன்று” என்றார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பெட்ரோல் விலை குறைந்தது! லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து சென்னையில் விற்பனை!
சத்தீஸ்கரில் நிலக்கரி சத்தியாகிரகம்! குறுந்தொடர் 1 1
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

“இந்த திட்டம், குறிப்பிட்ட படி முன்னேறி நகர்ந்தால், தம்னார் கிராமம் முழுவதும் அழிந்து விடும். இதுவரை சத்தீஸ்கர் மாநிலத்தில் நிறைய நிலக்கரி சுரங்கங்கள் வந்துவிட்டன. ஆனால் அதன் பயன் என்ன? யாருக்கு அதுவெல்லாம் சென்று சேர்ந்திருக்கிறது? இது முதலாளி நிறுவங்களின் வர்க்க நலனுக்கான திட்டம் மட்டுமே! இக்கிராம மக்களின் பணத்தில் அவர்கள் கொழுத்த போகிறார்கள்” –சவிதா, சமூக ஆர்வலர்

தற்போது, கரே பெல்மா அணுமின் நிலையத்தின் 1, 2 மற்றும் 3ம் கட்ட சுரங்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 8 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி சத்தியாகிரகம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில், முதல் பிரிவு குஜராத் மாநில மின்சாரக் கூட்டுத்தாபன லிமிடெட் நிறுவனத்துக்கும், இரண்டாம் பிரிவு மகாராஷ்டிரா மாநில மின் உற்பத்தி நிறுவனத்துக்கும் (மஹாகென்கோ) சொந்தமானது, மூன்றாம் துறை சத்தீஸ்கர் மாநில மின் உற்பத்தி நிறுவனதிற்கும் சொந்தமானது.

என்ன தான் அரசு துறைக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கமாக இருந்தாலும், அதன் மொத்த பணிகளையும் செய்து வருவது அதானி நிறுவனம் தான். அதாவது சுரங்கங்களில் வேலை மற்றும் செயல்பாடுகள் முழுவதையும் அதானி தான் கவனித்து கொள்கிறது. இதனால் மொத்த அதிகார மிக்க பதவிகளும் இவர்கள் வசம் இருந்து வருகிறது. எனவே நிலம் கையகப்படுத்தல், சுரங்கத் திட்டமிடல், மேம்பாடு, செயல்பாடு, நிலக்கரி பிரித்தெடுத்தல் மற்றும் போக்குவரத்து, ஓய்வு போன்ற பணிகளை அதானி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த இடத்தில் அரசு நிறுவனங்கள் வெறும் பொம்மையாகவே செயல்படுகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  பட்ஜெட் 2020: துறைகளும், நிதி ஒதுக்கீடுகளும்

இதனை தொடர்ந்து கடந்த வாரம் இரண்டாம் சுரக்கத்திற்கு நிலம் கையப்படுத்த்துதல் குறித்து மக்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே இரண்டு முறை தோல்வியில் முடிந்த இந்த கூட்டம் மூன்றாவது முறையாக அழைக்கப்பட்ட போது, மக்கள் போராட்டத்தில் குதித்து விட்டனர்.

தொடரும்…

தொகுப்பு: விடுதலை தமிழ்முரசு

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment